லோக்சபா
தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம்
ரே பரேலி தொகுதியில் சோனியா
காந்தியின் மகள் பிரியங்கா வதேரா
போட்டியி டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை
தேர்தலில் தோல்வி பல ஆண்டுகளாக
ரே பரேலி லோக்சபா தொகுதி
சோனியா குடும்பத்தினரின் விருப்பத் தொகுதியாக இருந்து வருகிறது. கடந்த
ஆண்டு நடந்த உத்தர பிரதேச
சட்டப் பேரவைத் தேர்தலில் அங்கு
காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில்
ரே பரேலி லோக்சபா தொகுதி
உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான சோனியாவும், அவரது மகனும் காங்கிரஸ்
துணைத் தலைவருமான ராகுல் அதிருப்தி அடைந்தனர்.
சோனியா உடல் நலக்குறைவு: மேலும்,
அண்மைக் காலமாக சோனியாவுக்கு அடிக்கடி
உடல் நலக் குறைவு ஏற்படுகிறது.
அதனால் முன்பு போல டில்லியில்
இருந்து ரே பரேலிக்கு அவரால்
செல்வதற்கு இய வில்லை என
கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ரே பரேலியில் கட்சி
வளர்ச்சி, தொகுதிப் பணி ஆகியவற்றை அவரது
மகள் பிரியங்கா வதேரா கவனித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில்
பிரியங்காவை ரே பரேலியில் நிறுத்துவதற்கு
காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து
வருகிறது. தற்போது பிரியங்காவிற்கு உதவியாக
பிகார் மாநில காங்கிரஸில் தீவிரமாகப்
பணியாற்றி வரும் பிரீதி கரேயிடம்
ரே பரேலி தொகுதிப் பணிகள்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ConversionConversion EmoticonEmoticon