தனது இளம் வயதில் கணனி புரோகிறாம் எழுதினார் பில்கேட்ஸ்


பதின்மூன்று வயதிலேயே புரோகிராம் எழுதத் தொடங்கியவர் பில்கேட்ஸ்
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) மைக்ரோசொப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுநராகவும் முதன்மை செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்பட்டவர். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வந்தவர். 1999ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலர்களைக் கடந்தது.


வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் ஹெச் கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல்.

இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத் தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர் தன் பதின்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாய்ந்த லேக்சைட் பாடசாலைக்கு அனுப்பப்பட்டார்.

இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது லேக்சைட் பாடசாலையில் ஒரு கணனி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணனி (இது General Electric நிறுவனத்தின் கணனி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டது.

மாணவர்களுக்கு கணனி பயின்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். இவரது ஆர்வத்தைப் பார்த்து பாடசாலை இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது. அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணனி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால் கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணனியின் இயங்கு தளத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அதிக கணனி நேரத்தை உபயோகித்ததாக குறை கூறி தினசரி சில மணி நேர கணனி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.

பில்கேட்ஸ் தனது பாடசாலைப் படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு ப்ரோகிராமிங்கில் ஆர்வமிருந்ததால் தனது 13 ஆம் வயதிலேயே ப்ரோகிராம் எழுதத் தொடங்கினார்.

பிறகு 1973 இல் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸ்டீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.

தனது படிப்பை ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார்.

கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது. இதனால் அவர்கள் கணிப்பொறிக்கு தேவையான மென்பொருள்களை எழுத துவங்கினர். அவருடைய இந்த தொலைதூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிக பெரிய வெற்றியை தேடித் தரலானது. இவருடைய தலைமையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நோக்கமானது நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணனி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.
Previous
Next Post »

More News