இன எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது - அமெரிக்கா



அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை
சர்வதேச அளவில் யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் வெனிசுவெலா, எகிப்து மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் யூத எதிர்ப்பு செயற்பாடுகள் அதிகரித்திருப் பதாக விபரித்துள்ளது. இதனால் யூத எதிர்ப்பு செயற்பாடுகளை அவதானிக்க அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி விசேட தூதுவர் ஒருவரையும் நியமித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான ஆண்டு அறிக்கை கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இதில் எகிப்து ஊடகங்களில் யூத எதிர்ப்பு கருத்துகள் பரவி வருவது விபரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் வெனிசுவெலா அரச ஊடகங்கள் மற்றும் ஈரானிலும் அதிகரித்திருப்பது அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “21 ஆம் நூற்றாண்டிலும் சம்பிரதாயமான யூத எதிர்ப்புகளும் சதிகார தொன்மங்களை பயன்படுத்துவதும் தொடர்ந்து மெருகேற்றப்பட்டே வருகிறதுஎன மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் பெல்ஜியத்தில் பாடசாலை அறைகளில் மத அடிப்படையில் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டு முஸ்லிம்க ளுக்கு கடும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவின் மன்களோரிலும் பாடசாலையில் தலையை மறைத்து பர்தா அணிய தடை உள்ளது. பர்மா வில் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நீடிப்பது குறித்தும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.

அதேபோன்று பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய சிறுபான்மையினர் இலக்குவைக்க ப்படுவதும் அமெரிக்க அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தானில் ஷியா மற்றும் அஹமதியாக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது, சவூதி, பஹ்ரைனில் சுன்னி முஸ்லிம்கள் அல்லாதோருக்கு எதிரான துஷ்பிரயோ கங்கள், ஈரானில் சுன்னி முஸ்லிம்கள் தொந்தரவுக்கு உள்ளாவது மற்றும் கைது செய்யப்படுவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத நிந்தனை சட்டங்களும் சர்வதேச அளவில் தீவிரமடைந்திருப்பது கண்டறியப் பட்டிருப்பதாக ஜோன் கெர்ரி குறிப்பிட் டுள்ளார். தனிப்பட்ட குறிக்கோள்களுக்காக இந்த சட்டத்தை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சிறுமி ஒருவர் பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்ட சம்பவம் இதற்கு உதாரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

*சிறுபான்மை மதக் குழுக்களின் உரிமையை மீறும் வகையில் ரஷ்யாவில் தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது.

*சூடான் நிர்வாகம் தேவாலயங்களை அழித்து வருவது இரு நம்பகமான அறிக்கை மூலம் உறுதியாகிறது.

*கடுமையான இஸ்லாமிய வரையறைகளுக்கு அமைய நடக்க மாலைதீவு நிர்வாகம் பிரஜைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

ஆகிய விபரங்களையும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் உள்நாட்டு நிலையும் முழுமையானது அல்ல என ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.

மதக் கோட்பாடுகளை நம்புவது, கடைபிடிப்பது அல்லது நம்பாமல் இருப்பது அல்லது நம்பிக்கையை மாற்றுவது ஒவ்வொரு மனிதனதும் பிறப்பு உரிமையாகும்.

எனவே அனைத்து நாடுகளும் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்ட நாடுகள் அடிப்படை உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என அவர் வலியுறுத்தினார்.
Previous
Next Post »

More News