குஜராத்
மாநிலத்தின் ஆனந்த் பகுதியிலிருந்து அனுப்பப்பட்ட
கடிதம் நவசாரி பகுதியில் உள்ள
டாக்டருக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கப்பெற்றுள்ளது. ஷியாம் குமார்
என்பவர் குஜராத்தின் ஆனந்த் பகுதியில் கண்டாக்டராக
உள்ளார். இவர் நவசாரி பகுதியில்
உள்ள தனது டாக்டர் நண்பர்
அசோக் ஷெராப்புக்கு 1982 ஜனவரி 1ம் திகதி
ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதினார். அதில்
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள அவர் ஒரு நோயாளியை
கண் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் 31 ஆண்டுகள் கழித்து அசோக் ஷெராப்பிடம்
கிடைக்கப்பெற்றுள்ளது. இது குறித்து அசோக்ஷெராப்
(63) கூறுகையில், இத்தனை ஆண்டுகள் கழித்து
கடிதம் வந்ததைக் கண்டு முதலில் அதிர்ச்சி
ஏற்பட்டது. இது குறித்து நண்பர்
குமாரிடம் தொலைபேசியின் மூலம் தெரிவித்தேன். அவரும்
இதுபோல கடிதம் எழுதியதே நினைவில்
இல்லை.
ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து
வந்ததைக் கேட்டு அவர் திகைத்துவிட்டார்.
முத்திரை ஒட்டாமல் இருந்ததால் தபால்காரர் ரூ. 10 வசூலித்தார் என்றார்.
இது குறித்து நவசாரி தபால் நிலைய
துணை போஸ்ட் மாஸ்டர் நவநீத்
சர்மா கூறுகையில், அந்த கடிதம் இத்தனை
ஆண்டுகளாக எங்கு இருந்தது என்று
தெரியவில்லை என்றார்.
ConversionConversion EmoticonEmoticon