ஆலோசனையும் வழிகாட்டலும் அவசியமானதா?


வாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தமான விடயங்களை தெரிவு செய்யவும் தீர்மானங்கள் மேற்கொள்ளவும் உளவியல் அணுகுமுறை அடிப்படையில் பயிற்சி பெற்றவர்களால் வழங்கப்படும் உதவியே வழிகாட்டல் எனப்படும்.

தெரிவு செய்தல், பொருத்தப்பாடு காணல், பிரச்சினையைத் தீர்த்தல் ஆகியவற்றில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் உதவி மற்றும் வாழ்க்கையை சீர் அமைத்துக் கொள்வதற்கு உதவி தேவைப்படும் ஒருவருக்கு அதற்கான தகைமையுள்ள ஒருவரினால் அளிக்கப்படும் உதவியும் வழிகாட்டலாகும்.

ஆலோசனை எனப்படுவது ஆலோசனை நாடி தனது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு ஆலோசகரை நேர்முகமாக சந்தித்து நுட்பமுறையின் அடிப்படையில் கலந்துரையாடி அப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அணுகுமுறை களைத் தீர்மானித்துக்கொள் வதாகும். மேலும் ஒருவருக்கு அவரைப்பற்றிய சுய விளக்க த்தை ஏற்படுத்தி அதனடிப்படை யில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினையை அவரே தீர்த்துக் கொள்ளுமாறு வழங்கும் உதவியுமாகும்.

வாழ்க்கையில் எதிர்நோக்க வேண்டிய ஒவ்வொரு அனுப வங்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை ஒருவரிடத்தில் விருத்தியடைய வழங்கும் உதவி ஆலோசனை எனப்படும். முன்னொரு காலத் தில் பாரம்பரிய கல்வி நிறுவ னங்களும் சமய பெரியார்களும் பிள்ளைகளுக்கும் பிரச்சினைக் குரியவர்களுக்கும் ஏற்ற அறிவு ரையும் ஆலோசனையும் வழங்கி அவர்களுக்கு வழிகாட்டினார்கள். பாரம்பரிய சமுதாயத்தில் இது சாத்தியமானதாக இருந்தது. அன்றைய சமுதாயத்தில் குருவானவர் பெற்றிருந்த மதிப்பும் நெருக்கமான உறவும் வழிகாட்டல், ஆலோ சனை வழங்களில் ஓர் உறுதிப் பாட்டையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், சமுதாயத்தில் ஏற்பட்ட மாற் றம் இந்த உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் சிதைத்துள்ளது.

ஆசிரியர், அதிபர் பயிற்றப்பட்ட ஆலோசகர்கள் ஆகியோர்களினால் ஒரு மாணவர் மன நிறைவு சமூகப்பொருத்தப்பாடும் பெற்று தன் ஆற்றல்களின் உச்ச நிலையை அடைவதற்கு அவனது இளமைப் பருவத்தில் வழங்கப்படும் உதவியே பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனையுமாகும். மேலும் பிள்ளைகளை உளவியல் ரீதியில் சமநிலைமிக்கவர்களாக மாற்றவும் பிறரால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய நடத்தைக் கோலங்களை பிள்ளைகளிடம் உருவாக்கவும் பிறரை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய திறன்களை அவர்களிடம் உருவாக்கி சமூகத் திறன்களை விருத்தி செய்யும் பயிற்சி பெற்றோரால் வழங்கப்படும் உதவியே பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனையும் என்று கூறப்படும்.

பாடசாலைகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் மட்டுமன்றி கற்றலில் செல்வாக்குச் செலுத்தும் உடல் நலம், உளநலம், பூரண ஆளுமை விருத்தி, சமூகத்தொடர்புகள், தொழில் வாய்ப்புக்கு ஆயத்தம் செய்தல், பாடசாலை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்துகின்றன.

கல்வி ஒருவனை நல்ல மனிதப்பண்புடையவனாகவும் நற்குடிமகனாகவும் ஆக்கி அவனைப்போன்றவர்களின் மூலமாக நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று ரூசோ கூறிய கூற்று இதனை வலியுறுத்துகின்றது. அந்த வகையில், பாடசாலைக்கு வழிகாட்டல், ஆலோசனைச் சேவையானது முக்கியமானது என்று உணரப்பட்டுள்ளது.

வழிகாட்டலுக்கும் ஆலோசனை வழங்கலுக்கும் பொருத்தமான இடம் கல்விக்கூடங்களேயாகும். ஆசிரியர்களின் பணி கற்பித்தல் மட்டுமல்ல உள்ளார்ந்த கற்றல்களை வெளிப்படுத்துவது மட்டுமல்ல. நல்ல மனப்பாங்குகளை உருவாக்குவதும் நடத்தையில் விரும்பத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதுமேயாகும். இந்த வகையில் கல்வியையும் ஆலோசனை வழிகாட்டலையும் பிரிக்க முடியாது. ஆசிரியர்களின்


கடமைகளுள் ஆலோசனை வழிகாட்டலும் அடங்கியுள்ளது. அவர்கள் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே பாலமாக இருக்கின்றார்கள்.

இதன் அடிப்படையில் பாடசாலையின் ஆலோசனையும் வழிகாட்டலும் ஒரு மாணவனின் வாழ்க்கைக்கு முக்கியமானது என்று அறிஞர்களினாலும் ஆய்வாளர்களினாலும் உணரப்பட்டுள்ளது.

ஞி.சி. ணிathலீwson என்பவரின் கருத்துப்படி வழிகாட்டலானது, பின்வரும் 4 நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக பாடசாலையில் முன்னெடுப்பதாக காணமுடிகின்றது.

1. கல்வி சார்பான வழிகாட்டல்

2. தொழில் சார்பான வழிகாட்டல்

3. தனியாள் சார்பான வழிகாட்டல்

4. சமூக வழிகாட்டல்

மேற்படி காரணங்களை ஆராய்ந்து நோக்குமிடத்து தற்போதைய பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு, இடைநிலைப் பிரிவு என்ற வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரிடமும் ஏதோ பிரச்சினைகள் காணப்படுவதையும் அதனால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் வெளிக் கிழம்புவதையும் காண முடிகின்றது. இப்பிரச்சினைகளுக்கு மேற்கூறிய முக்கிய காரணங்கள் மூலமும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் மூலமுமே நிவாரணம் வழங்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இதற்கு பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் போன்ற சகல தரப்பினர்களதும் ஒத்துழைப்பு பெறப்படுவது அவசியமாகும். அத்தோடு இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வளங்களும் வசதி வாய்ப்புக்களும் கிடைக்குமானால் பல்வேறுபட்ட பிரச்சினைகளால் சிக்கிச் சீரழிந்து வாழ வழி தெரியாது அலைந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கு இவ்வாறான கல்விச் செயற்பாடுகள் ஊடாக வழிகாட்டல் செய்வது, மாணவரது ஆளுமை விருத்திக்கு பயனுள்ளதாக அமையும். அத்துடன் இன்றைய நவீன உலகுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றலும் ஆளுமையுமுள்ள மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு பாடசாலைகளுக்கு உண்டு என்பதைதுணிந்து கூறலாம்.
Previous
Next Post »

More News