நான்கு லட்சம் டொலருக்கு விலை போன புறா


எந்தப் பொருளுன்கு என்ன பெறுமதி என்பது இந்த படித்த மனிதனுக்கே தெரியாமல் தத்தளிக்கும் காலம் இது. இந்த வகையில் இந்த தகவலை வாசியுங்கள்.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்த பந்தயப் புறா 4 லட்சம் டாலர்களுக்கு விலை போய் உலக சாதனை படைத்துள்ளது.


பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லியோ ஹெரேமேன்ஸ்(66) என்பவர் ஒரு பந்தயப் புறாவை வளர்த்து அதற்கு தீவிரப் பயிற்சி அளித்து வந்தார். ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த ஜமைக்கா நாட்டு வீரர் உசைன் போல்ட்டின் நினைவாக வளர்ப்பு புறாவுக்கு அவர் போல்ட் என்று பெயரிட்டார்.

தனது பெயருக்கு ஏற்றபடி இந்த புறாவும் பல போட்டிகளில் பங்கேற்று பயிற்சியாளருக்கு பெருமை தேடித் தந்தது.

பெல்ஜியத்தில் உள்ள 'புறாக்கள் சொர்க்கம்' ஏல நிறுவனத்தில் இந்த புறா ஏலம் விடப்பட்டது. சீனாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் போல்ட்டை 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுத்தார்.

ஒரு பந்தயப் புறா 4 லட்சம் டாலர்களுக்கு விலை போனது உலக சாதனையாக கருதப்படுகிறது.

இதேபோல் தனது மாடங்களில் உள்ள சுமார் 530 புறக்களையும் அவர் ஏலம் விட்டார். போல்ட் உட்பட எல்லா புறாக்களும் 56 லட்சம் அமெரிக்க டாலர்களை லியோ ஹெரெமேன்சுக்கு பெற்றுத் தந்துள்ளது.

இதுவும் ஒரு புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது.

போல்ட்டை ஏலத்தில் எடுத்த சீன தொழிலதிபர், இதே போல் பல பந்தயப் புறாக்களை உருவாக்கும் நோக்கில் போல்ட்டை இனப் பெருக்கத்திற்கு பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
Previous
Next Post »

More News