மரண தண்டனையும், மற்ற நாடுகளில் ஜெயில்
தண்டனையும் கொடுப்பது வழக்கம். ஆனால் இங்கிலாந்து நாட்டில்
போதை மருந்து கடத்திய ஒருவருக்கு
கட்டுரை எழுதும் நூதன தண்டனை
கொடுத்திருக்கிறார் ஒரு நீதிபதி. இது
குறித்த பரபரப்பான தகவல் இதுதான்.
இங்கிலாந்தில்
கிளவுஸ் செஸ்டர் ஷயர் பகுதியைச்
சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி டெர்ரி பென்னெட் (வயது
32) க்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா?
“போதை மருந்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சமுதாய சீரழிவு”
என்பது குறித்து 5 ஆயிரம் வார்த்தைகளில் கட்டுரை
எழுத வேண்டும் என்பது ஆகும்.
முதலில்
அவருக்கு 1 வருடம் சிறை தண்டனையும்,
தண்டனை காலத்தில் 240 மணி நேரம் அவர்
செய்யும் வேலைக்கு கூலி கிடையாது என்பதும்
ஆகும். ஆனால் அவர் வேலை
செய்ய முடியாத அளவுக்கு தோள்
பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டு இருந்ததால்,
அந்த தண்டனைக்கு பதில் கட்டுரை எழுதும்
தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நூதன தண்டனையை அளித்தவர்
பிரிஸ்டல் கிரவுன் நகர கோர்ட்
நீதிபதி ஜூலியன் லாம்பெர்ட். கைதி
டெர்ரி பென்னட் கட்டுரை எழுதி,
சிறை நன்னடத்தை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்பது
நீதிபதியின் உத்தரவு.
ConversionConversion EmoticonEmoticon