குடித்து
விட்டு அப்படியே சாப்பிடும் தேநீர் கோப்பை
,இதுவரை
ஒரு கப்பில் சூடான கோப்பியும்
இன்னொரு தட்டில் கேக்கும் வைத்துச்
சாப்பிட்டு வந்தோம். இப்போது சாப்பிடுவதில் புதிய
முறை ஒன்று அறிமுகமாகின்றது.
அதாவது
கேக்கில் செய்யப்பட்ட கப்பில் கோப்பி இருக்கும்.
முதலில் கோப்பியைக் குடித்துவிட்டு பின்னர் கப்பைச் (கேக்கைச்)
சாப்பிட்டலாம். கோப்பி குடித்துவிட்டு கப்பை
வீசி எறிந்து சுற்றுச் சூழலுக்கு
பங்கம் ஏற்படுத்துவதை விட்டு விட்டு இப்படியான
சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகள் வரவேற்கத் தக்கது.
இப்படித்தான்
முதலில் கோன் ஐஸ்கிரீமையும் கண்டுபிடித்தார்கள்.
ஆம், ஐஸ்கிரீமைச் சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் கப்பை
வீசியெறிந்து விட்டு கோனைச் சாப்பிடலாம்.
சுற்றுச் சூழலைக் கெடுக்காமல் தான்
கோன் ஐஸ்கிரீமைக் கண்டு பிடித்தார்கள். பசுமையை
ஊக்குவிக்கும் புதுமையான முயற்சியை யார் ஊக்குவித்தாலும் நாம்
வரவேற்போம்.
ConversionConversion EmoticonEmoticon