கல்வி மற்றும் பணி ஆட்சேர்ப்பு
ஆகிய இரு முக்கிய துறைகளிலும்
சிறப்பான உதவிகள் வழங்கக் கூடிய
‘கல்வி மற்றும் தொழிற்திறன் துறை
பொருட்காட்சி – 2013 (ஈ. சீ. எஃப்)
தொடர்ச்சியான 10வது வருடமாக இவ்வருடமும்
பிக்கோ இவென்ட்ஸ் நிறுவனத்தினால் எதிர்வரும் ஜூன் மாதம் 7 முதல்
10 ஆம் திகதிகளில் ஸ்ரீலங்கா எக்ஸ்பிஷன் அன்ட் கொன்வென்ஷன் சென்டரில்
நடத்தப்படுகின்றது.
கல்வியாளர்கள்
மற்றும் தொழிற் திறமைசார் கல்வி
மற்றும் பயிற்சிக்கான போதனாசிரியர்கள், கல்வி வாய்ப்புகள் மற்றும்
தொழிற் திறனாளிகள் என பரந்ததான அனைத்துத்
துறைகளையும் சார்ந்தவர்களின் சிறப்பான ஒன்றுகூடல் நிகழ்வாகும் இது.
பத்தாவது
வருடமாகவும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இந்தக் கல்விப்
பொருட்காட்சியின் முலம் உயர் கல்வியை
நாடும் மாணவர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் பொருத்தமான கல்வித் துறையையும் தொழிற்
திறன் துறை பாதையையும் தேர்ந்தெடுத்துக்
கொள்வதற்கான உதவியும் அரிய வாய்ப்பும் இந்தக்
கல்விப் பொருட்காட்சி மூலம் வழங்கப்படுகின்றது.
கல்லூரிகள்,
பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், வணிகக் கல்விக் கல்லூரிகள்
மற்றும் பயிற்சி வழங்கும் கல்வி
நிலையங்கள் எனப் பல்வேறு கல்வித்
துறைசார்ந்த கல்வி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திக்
காட்சிப்படுத்தும் இந்த நிகழ்வானது ஐரோப்பிய
மற்றும் தென் கிழக்கு ஆசியா
ஊடான சர்வதேச பங்குபற்றலை உள்ளடக்கியதாகும்.
மாற்றமடைந்து
வரும் கல்வித் துறையின் பல்வேறு
பரிமாணங்கள், உயர்கல்விக்கான முக்கியத்துவம், போட்டித் தன்மையும், சவாலும் கொண்ட தொழிற்துறை
பணி என்ற யதார்த்த நிலையின்
கீழ் உயர் கல்வியை நாடும்
மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் (தொழிற்சார் கல்வியை நாடுபவர்களுக்கும் தேவைப்படும்
அனைத்தும் சர்வதேச சேவைகள், வழங்குநர்களினால்
காட்சிப்படுத்தப்படும், இந்த அரங்கின் மிகப்
பிந்திய கல்வி மற்றும் தொழில்நுட்ப
வாய்ப்புகளுக்குள் பிரவேசிப்பதற்கான ஒரு துண்டுகோலாக ஈ.
சி. எஃப் செயற்படுகின்றது.
தற்போதுள்ள
பல்வேறு கல்வித் துறை வாய்ப்புக்கள்
பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் அல்லது வலுப்படுத்திக்
கொள்வதற்கும் அல்லது எதிர்கால நிகழ்ச்சி
நிரல் பற்றி மூலோபாயத்துடன் திட்டமிடுவதற்கும்,
அடைய வேண்டிய செயல் இலக்கு
பற்றி தொழில்சார் அறிவிப்பாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், தனித்துவ சுயதேவைகளுக்கான வழிக்காட்டல்களையும், கருத்துக்களையும் பெற்றுக்கொள்வதற்குமான அனைத்து வாய்ப்புகளும் இந்தக்
கல்விப் பொருட்காட்சியில் உள்ளவையினால் பங்கேற்பாளர்கள் இதன் மூலம் சிறப்பான
பலனை அடையலாம்.
இவற்றிற்கும்
மேலதிகமான சிறப்பம்சங்களாக பல்வேறு போட்டிகளும் (உள்நாட்டுப்
போட்டிகளும், சர்வதேச போட்டிகளும்) தொழிற்துறைப்
பணிக்கான வழிகாட்டல்களும், கருத்தரங்குகளும் இவ்வரங்கத்தில் இடம்பெறவுள்ளன.
ConversionConversion EmoticonEmoticon