விண்வெளியில்
இருக்கும் பாரிய கருந்துளைகளை ஒன்று
ஒளியின் அளவு வேகத்தில் சுழல்வதாக
வானியலாளர்கள் கணித்துள்ளனர்.
கருந்துளைகள்
வேகமாக சுழன்று வளர்ந்து வருவதாக
வானியலாளர்கள் நீண்டகாலமாக சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்நிலையில்
நாஸா அண்மையில் நிறுவிய நுஸ்டா செய்மதி
எக்ஸ்ரே தொலைநோக்கி மற்றும் ஐரோப்பிய விண்வெளி
ஆய்வு மையத்தின் செய்மதி தொலை நோக்கியை
கொண்டு கருந்துளையின் சுழற்சி வேகத்தை வானியலாளர்கள்
ஆய்வு செய்துள்ளனர்.
இதில்
60 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருக்கும் என். ஜி. ஜி.
1365 என்ற பால் வெளியின் மையத்தில்
உள்ள கருந்துளையே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 மில்லியன் கிலோ மீற்றர் பரப்பளவு
கொண்ட கருந்துளை ஒன்று ஒளியின் வேகத்தில்
சுழல்வதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தொடர்பான முடிவு
‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு
முடிவு கருந்துளை ஒன்று பாரிய அளவு
வளர்ச்சி அடைவதற்கான காரணம் பற்றி கண்டறிய
உதவும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரபஞ்சத்தில் கண்டறியப்படாத புதிராக இருக்கும் கருந்துளைகளின்
ஈர்ப்பு விசைக்குள் சிக்கும் ஒளியுட்பட அனைத்தும் அதற்குள் உள்வாங்கப்படுகிறது. எல்லையற்ற பிரபஞ்சத்தை அழிக்கும் சக்தி கொண்டதாக கருந்துளை
இருக்கும் என அஞ்சப்படுகிறது.
ConversionConversion EmoticonEmoticon