பாப்பரசர்
16ஆம் ஆசீர்வாதப்பர் நேற்று தனது பதவியை
இராஜினாமாச் செய்து விடை பெற்றுச்
சென்றார். இதன் போது வரவிருக்கும்
பாப்பரசருக்கு எந்த நிபந்தனையும் இன்றி
அடிபணிந்து மரியாதை செலுத்துவதாக அவர்
அறிவித்தார்.
85 வயதான
16 ஆம் ஆசிர்வாதப்பர் நேற்று மாலை ரோமுக்கு
அருகில் இருக்கும் பாப்பரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான காஸ்டா கான்ட்லொ பொலிலிருந்து
விடைபெற்றுச் சென்றார். எனினும் ஓய்வுபெறும் முன்னர்
பாப்பரசர் அடுத்த பாப்பரசர் தேர்வு
செய்யப்பட விருக்கும் கர்தினால்களை சந்தித்து உரையாற்றினார். இந்நிகழ்வில் உலகெங்கிலுமுள்ள சுமார் 100 கர்தினால்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பாப்பரசர் “அடுத்த பாப்பரசருக்கு நிபந்தனை
யின்றி அடிபணிந்து மரியாதை செலுத்துவதாக கர்தினால்களிடம்
தெரிவித்தார். பாப்பரசருடனான சந்திப்பில் பங்கேற்ற மேற்படி கர்தினால்களில் இருந்தே
புதிய பாப்பரசர் தேர்வு செய்யப்பட வுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் கர்தினால்
அமர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதில் கர்தினால்கள் ஒற்றுமையுடன்
செயற்படும் படியும் புதிய பாப்பரசர்
தேர்வையொட்டி தாம் பிரார்த்தனை செய்வதாகவும்
16ஆம் ஆசிர்வாதப்பர் குறிப்பிட்டார்.
16ஆம் ஆசீர்வாதப்பர் ஓய்வுபெற்ற நிலையில் துணைத்தலைவராக இருந்த கர்தினால் டார்சிசோ
வர்டன் 1.2 பில்லியன் மக்கள் கொண்ட ரோமன்
கத்தோலிக்க திருச்சபைக்கு தற்காலிக பொறுப்பாளராக பதவி ஏற்றுள்ளார்.
பாப்பரசர்
16ஆம் ஆசிர்வாதப்பர் தனது வயது முதிர்ச்சியை
கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக
அறிவித்தார். இந்நிலையில் கடந்த 600 ஆண்டுகளில் பாப்பரசர் ஒருவர் ஓய்வுபெறும் முதல்
சந்தர்ப்பமாக இது பதிவானது. ஓய்வுக்குப்
பின்னரும் அவர் 16ஆம் ஆசீர்வாதப்பர்
என அழைக்கப்படுவார், என வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அவர் பாப்பரசருக்கான மோதிரம்
மற்றும் சிவப்பு நிற பாதணி
ஆகியவற்றை கையளிப்பார்.
ConversionConversion EmoticonEmoticon