புவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூகம்பம் ஏற்படுமா?


புவித்தட்டுகளின் மிக மெதுவான அசைவும் பாரிய  பூகம்பத்துக்கு வழியேற்படுத்தும்
நில நடுக்கம், பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும்.

இந்த அதிர்வு நில நடுக்கமானியி னால் ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நில நடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதே வேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.

பூமியின் மேற்பரப்பு பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் தட்டுகளாக இருக்கின்றன. நிலப்பரப்பிலும், நீரில் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு தட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது பன்னிரண்டு சிறிய தட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் தட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடங்குகின்றன.

இந்தத் தட்டுகள் சுமார் 80 கி. மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கின்றன. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய் வதுடன் நகர்ந்தும் செல்கின்றன.

இந்தத் தட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ. மீ. முதல் சுமார் 13 செ. மீ. வரை நகர்கின்றன. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த தட்டுகளின் இலேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.

ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலும் இரண்டும் தனித்தனி தட்டுகளில் அமைந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதி ஆசிய தட்டில் இல்லாமல் தனி தட்டாக அமை ந்துள்ளது. இதனாலேயே இது இந்தியத் துணைக் கண்டம் என்ற ழைக்கப்படுகிறது.

மேலும் இந்திய தட்டு ஆசிய தட்டு ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய தட்டை விட இந்திய தட்டு வேகமாக நகர்வதால், இந்திய தட்டு ஆசிய தட்டை மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே இமயமலைப் பிரதேசம்.

இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இதுதான். இரு தட்டுகளின் அழுத் தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது.

பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது யூரேசியா என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பத்தால் தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

நிலம் நடுங்குதலும் பிளத்தலுமே நில நடுக்கத்தின் பிரதான விளைவாகும். இதனால் கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நில நடுக்கத்தின் அளவு, மையத்தி லிருந்துள்ள தூரம் மற்றும் பிர தேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறு படக்கூடியது.

நில நடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களால் நிலத்தினதும் பனிப்பாறைகளின தும் உறுதித் தன்மை பாதிக்கப் படுவதால் மண்சரிவோ குளிர் கால நிலையுடைய இடங்களில் பனிச் சரிவோ ஏற்படலாம்.

நில நடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் பாரிய தீ அனர்த்தம் ஏற்படும் வாய் ப்புள்ளது. 1906 ஆம் ஆண்டில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அதிகமான இறப்புகளுக்கு தீ காரணமாகும்.

நில நடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே சுனாமியாகும். பொதுவாக 7.5 ரிச்டர் அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கங்களே சுனாமியை ஏற்படுத்தும். உதாரணமாக 2004 இல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கியமையாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.
Previous
Next Post »

More News