-மாலா கோகிலவாணி
'மார்ச்
8 பெண்கள் தினத்தில் மாத்திரம் சடங்காசரமாக அறிக்கைகள் மாத்திரம் விடுவதை கைவிட்டு பெண்கள்
தொடர்பான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நடைமுறைகளில் இணைக்கப்பட வேண்டும்' என்று பெண்ணிய செயற்பாட்டாளரும்
கிழக்குப் பல்கலைக்கழக பேராசியருமான சித்ரலேகா மௌனகுரு தெரிவித்தார்.
'சர்வதேச
மகளிர் தினம் 2013' இன்று வெள்ளிக்கிழமை உலகளாவிய
ரீதியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இலங்கையில்
பல பாகங்களிலும் பெண்கள் சார்ந்த விழிப்புணர்வு
நிகழ்வுகள் மற்றும் மகளிர் தின
நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
சர்வதேச
ரீதியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று
பல மடங்கு அதிகரித்து காணப்படும்
நிலையில் 'வாக்குறுதி ஒரு வாக்குறுதியே: பெண்களுக்கு
எதிரான வன்முறைகளை ஒழிக்கும் தருணம்' என்ற ஐக்கிய
நாடுகள் சபையின் எண்ணக்கருவில் இம்முறை
சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு
வருகின்றது.
இந்நிலையில்,
இன்றைய பெண்கள் தினத்தில் வலியுறுத்துப்பட
வேண்டிய விடயங்கள் தொடர்பில் பெண்ணிய செயற்பாட்டாளரும் கிழக்குப்
பல்கலைக்கழக பேராசியருமான சித்ரலேகா மௌனகுருவை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பில்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'இன்றைய
உலகு பல்வேறு முன்னேற்றங்களையும் அபிவிருத்திகளையும்
கண்டுவிட்டது என பலரும் பெருமையுடன்
கூறுகின்றார்கள். எனினும் இந்த முன்னேற்றங்களினதும்
அபிவிருத்திகளினதும் நன்மைகள் கிடைக்காத சமூகங்கள் உள்ளன என்பதை இவர்கள்
மறந்துவிடுகின்றனர்.
இலங்கை
பெண்களிடையே வறுமையும் வன்முறையால் தாக்கப்படலும் முக்கிய பிரச்சினையாக உள்ளன.
சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு வறுமை நிலையிலும்; வறுமை
கோட்டின் கீழ் உள்ள நிலையிலும்
வாழும் பெண்கள் இலங்கையின் பல
பாகங்களிலும் காணப்படுகின்றனர்.
இத்தகைய
பெண்களை பற்றிய உயர்வும் அக்கறையும்
திட்டமிடலும் செயலும் அபிவிருத்தி கொள்கைகளை
வகுத்து நடைமுறைபடுத்துகின்ற அரசு, அரசார்பற்ற நிறுவனங்களின்
மத்தியில் வளரவேண்டும்.
சந்தை பொருளாதாரத்தை மையமாக கொண்ட அபிவிருத்தி
திட்டங்கள் வறிய பெண்களை மேலும்
பாதிக்காதவாறு அவர்களது உரிமைகளை பாதுகாத்து வாழ்வாதாரத்தை முன்னேற்றி உறுதியாக்கி பொருளாதார பாதுகாப்பு பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மார்ச்
8 பெண்கள் தினத்தில் மாத்திரம் சடங்காசரமாக அறிக்கைகள் மாத்திரம் விடுவதை கைவிட்டு பெண்கள்
தொடர்பான ஆக்கப்பூர்வமான சிந்தனையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நடைமுறைகளில் இணைக்கப்பட வேண்டும்' என்றார்.
இன்று உலகளாவிய ரீதியில் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோம்
50 வீதத்திற்கும் மேட்பட்டு காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை,
உலகளாவிய ரீதியில் 603 மில்லியன் பெண்கள் வீட்டு வன்முறைகளுக்கு
உட்படுகின்றவராகவும் வீட்டு வன்முறைகள் ஒரு
குற்றமாக பதியப்படுவதில்லை என்றும் புள்ளிவிபர தகவல்கள்
மேலும் தெரிவிக்கின்றன.
இதைத்தவிர
70 வீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தமது வாழ்க்கையில்
ஏதேனும் ஒரு தருணத்தில் உளவியல்
தாக்கங்களை அல்லது பாலியல் வன்முறைகளை
எதிர்கொண்டவர்களாக உள்ளனர்.
குழந்தை
திருமணத்தை மேற்கொண்டவர்களாக 60 மில்லியன் சிறுமிகள் உலகளவில் காணப்படுவதாகவும் இவர்கள் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட நிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடந்த
11ஆம் மாதம் ஓடும் பஸ்ஸில்
ஆறு பேரினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட டெல்லி
மாணவி மற்றும் ஒருதலை காதலை
மறுத்ததால் அசிட் வீச்சுக்கு இழக்காகி
உயிரிழந்த வினோதினி ஆகியோரின் சம்பவங்கள் இன்று பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் எவ்வாறு தலைவிரித்தாடுகின்றன என்பதை
எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வன்முறைகளை
முற்றாக அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இன்றைய சர்வதேச
பெண்கள் தினத்தினம் எண்ணக்கரு வாக்குறுதி ஒரு வாக்குறுதியே: பெண்களுக்கு
எதிரான வன்முறைகளை ஒழிக்கும் தருணம்' என்ற எண்ணக்கருவில்
கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில்
இன்றைய தினத்தில் வலியுறுத்த நினைக்கும் விடயம் தொடர்பில் பெண்கள்
செயற்பாட்டு வலையமைப்பின் அங்கத்தவர் செரீன் அப்துல் சரூரை
தொடர்புகொண்டு கேட்டபோது,
'இலங்கையில்
யுத்தம் முடிவடைந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குறைவடைந்து
சென்றிருக்கவேண்டும். பெண்களுக்கு எதிரான உரிமைகள் மேலும்
வலுப்பெற்றிருக்க வேண்டும். ஆனால், யுத்தம் முடிவடைந்து
4 வருடங்கள் ஆகின்றபோதும் இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை.
மாறாக பல மடங்கு அதிகரித்துச்
சென்றுள்ளது. குழந்தை முதல் மூதாட்டி
வரை இலங்கையில் நாளுக்குநாள் பெண்கள் பல வன்முறைகளை
எதிர்கொள்பவர்களாகவே உள்ளனர்.
அதிகாரம்
வாய்ந்த உயர்பீடங்களில் இருப்பவர்களாலும் பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்ளும்
நிலை இலங்கையில் தொடர்கின்றது. இலங்கையில் காணப்படும் சட்டமும் சட்டத்தை சுற்றியுள்ள கட்டமைப்புகளும் வலுவனதாக இல்லாமை இதறகு காரணமாக
அமைந்துள்ளது.
பெண்களுக்கு
எதிரான வன்கொடுமைகளை இழைப்பவர்கள் சிறை தண்டனையை எதிர்கொள்வது
மிகவும் குறைவு. மாறாக அவர்கள்
சிறைசெல்லும் முன்பே முன்கூட்டிய பினையைபெற்றுகொள்கின்றனர்.
இலங்கையில்
பெண்களுக்கு பாதுகாப்புதரக்கூடிய சட்டமுறைமைகள் ஏற்படுத்தப்படவேண்டும். பெணக்ளுக்கு இருக்கும் உரிமைகள் மேலும் வலியுறுத்தப்படவேண்டும் என்பதையே இன்றைய
நாளில் நான் வலியுறுத்த விரும்புகிறேன்'
என்றார்.
ConversionConversion EmoticonEmoticon