ரஷ்யாவின்
யூரல் மாநிலத்தில் விண்கல் வெடித்துச் சிதறியதில்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளது. இதில்
200 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
வெள்ளிக்கிழமை
காலை ரஷ்யாவில் விண்கல் வெடித்துச் சிதறிய
போது கால்பந்து மைதானம் போல் காட்சி
தரும் ஆஸ்ட்ராய்ட் 2012 டி.ஏ.14 என்ற
பாரிய விண்கல் பூமிக்கருகே பூமியை
கடந்து சென்றுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் பூமியை தாக்கும்
என பலரும் கூறியதுடன் தொலை
தொடர் புகள் அனைத்தும் சிதைந்து
விடும் என்றும் எச்சரித்திருந்தனர். ரஷ்யாவில்
விழுந்த எரிகல்லும், மேற்படிஎரிகல்லும் இரண்டும் எதிர்திசைகளில் பயணித்துள்ளன.
பூமியை
கடந்து சென்ற விண்கல் அமெரிக்க
பகுதிகளில் தென்படவில்லை. எனினும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்
தொலைநோக்கி மூலம் பார்த்துள்ளனர்.
பூமியை
விண்கல் கடந்து சென்றதால் தப்பியது
பூமி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எரிகல் பறந்து சென்றதில்
உடைந்த ஜன்னல் கண்ணாடி சிதறல்கள்
பட்டு பலர் படுகாயம் அடைந்தனர்.
இதில் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை
1200ஐ தாண்டியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த
அதிர்ச்சியில் இருந்து உலக மக்கள்
மீள்வதற்குள், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கால்பந்து மைதான அளவு விண்கல்
பூமிக்கு மேலே கடந்து சென்றதாக
விஞ்ஞானிகள் கூறினர்.
வெள்ளிக்கிழமை
காலை 9 மணியளவில் மத்திய ரஷ்யாவின் யூரல்
மலைப்பிரதேச பகுதியில் பிரமாண்ட எரிகல் தகதகவென எரிந்தபடி
மிக மிக அருகில் பறந்து
சென்றது. அந்த கல் வெடித்து
சிதறியதில் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், கடைகளின்
ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. எரிகல்
தீ ஜுவாலையுடன் பறந்த போது திடீரென
சாலைகளில் கருமேகம் சூழ்ந்தது போலவும், திடீரென வானில் இருந்து
ஒளிவெள்ளம் பாய்ச்சியது போலவும் காணப்பட்டது. இதனால்
மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ConversionConversion EmoticonEmoticon