சத்தமாக
சிரித்தவருக்கு, அமெரிக்காவில், ஒருமாதம், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின், நியூயோர்க் நகரை சேர்ந்தவர், ராபர்ட்
சியாவெல்லி. இவர் சத்தம் போட்டு
பலமாக சிரிப்பது, தலைவலியை ஏற்படுத்துவதாக, பக்கத்து வீட்டுக்காரர் புகார் அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த, நியூயோர்க்
நீதிமன்றம், ராபர்ட்டுக்கு, 25 ஆயிரம் ரூபாய், அபராதம்
விதித்துள்ளது. "அபராத தொகை செலுத்த
தவறினால்,ஒரு மாதம் சிறை
தண்டனை அனுபவிக்க வேண்டும்´ என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, ராபர்ட்டின் வழக்கறிஞர் ஆண்ட்ரூ காம்பனெல்லி கூறியதாவது:ராபர்ட்டுக்கு, நரம்பு பாதிப்பு மற்றும்
வலிப்பு நோய் உள்ளது. இதை
பக்கத்து வீட்டுக்காரர், கேலி செய்து வந்தார்.மென்மையான குணம் கொண்ட ராபர்ட்,
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே, அண்டை வீட்டுக்காரரை பார்த்து
சிரித்தார்.இதற்காக, அவருக்கு, சிறை தண்டனை விதிப்பது
அபத்தம்.இவ்வாறு, ஆண்ட்ரூ கூறினார்.
ConversionConversion EmoticonEmoticon