சுமார்
ஏழு வருடங்களாக நிலுவை யிலிருந்த சகோதரி
றிஸானா நபீக்கிற் கான மரண தண்டனை
சென்ற 09.01.2013 அன்று நிறைவேற்றப் பட்டவுடன்
அது இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பல்வேறு
உணர்வலைகளை மிகவும் பலமாகத் தோற்றுவித்து
விட்டது. சவூதியில் பல்வேறு
சந்தர்ப்பங்களில் வேறு பட்ட பல
நபர்களுக்கு அவர்கள் உள்நாட்டவர்களாக இருந்தாலும்
சரி வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி மரண தண்டனை
நிறைவேற்றப்படுவது அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வாக
இருந்த போதிலும் ரிஸானா நபீக்கிற்கு கொடுக்கப்பட்ட
மரண தண்டனை யானது ஐக்கிய
நாடுகள் சபை பகிரங்கமாக
கண்டிக்கும் அளவுக்குச் சென்று விட்டது. இதற்குப்பல
காரணங்கள் பின்னணியாக இருந்த போதிலும் சம்பவம்
நிகழும்போது ரிஸானா 18 வயதுக்குக் குறைந்த ஒரு சிறுமி
என்ப தால் ஏற்பட்ட அனுதாப
உணர்வும் கொடூர வறுமையின் காரணமாக
வெளி நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற
அவர் வேண்டுமென்றே இக்குற்றத் தைச் செய்யவில்லை என
நம்பப்பட் டதும் இவற்றுள் பிரதானமானவை
எனலாம்.
இவை ஒரு புறம் இருக்க
மறுபுறத்தில் றிஸானாவுக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து
இஸ்லாத் தின் புனித ஷரீஆ
சட்டங்கள் மீதான குற்றச்சாட்டுகளும் தாக்குதல்களும்
சரமாரியாகத் தொடுக்கப்பட்டுக் கொண் டிருக்கின்றன. அவை
இன்னும் ஓய்ந்த பாடில்லை. இஸ்லாத்தைப்
பற்றியும் அதன் சீரிய சட்ட
திட்டங்கள் பற்றியும் சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்களும் இஸ்லாத்தின் மீது குரோதமும் காழ்ப்
புணர்வும் கொண்டவர்களும் இச்சந்தர்ப் பத்தை தமக்கு வெகுவாக
சாதகமாக்கிக் கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் வளர்ச்சி வேகத்தைக் கண்டு வெம்பி வெடித்து
செய்வதறியாது திகைத்து நின்ற இவர்களுக்கு இது
வெற்றுவாய்க்கு அவல் தீனி கிடைத்தது
போல் ஆகிவிட்டது. இஸ்லாமிய ஷரீஆச் சட்டங்கள் பற்றி
கீழ்த்தரமான சிந்தனைகளை முகநூல்
மற்றும் டுவிட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவர்கள் பரப்பி வருகின்றனர்.
எமது நாட்டில் மாற்று மத சகோதரர்களுக்கு
மத்தியில் ‘ஷரீஆ’ சட்டங்கள்
இவ்வளவு வக்கிரத் தன்மை கொண்டவையா எனும்
சந்தேகம் வலுவாக நிலை கொள்ளும்
அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டிருக்கிறது.
றிஸானாவின் தண்டனை நிறைவேற்றப்பட்ட
மறுதினம் இலங்கை வானொலியில்
பத்திரிகைச் செய்திகளை விமர்சிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடாத்திக் கொண்டிருந்த
அறிவிப்பாளர் ஒருவர் இந்த விடயத்தைப்
பேசு பொருளாக்கி நேயர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய ஷரீஆவைப் பற்றிய சந்தேக எண்ணங்
களை விதைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.
எனினும் அந்நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட
முஸ்லிம் சகோதரர்களுக்கோ ஷரீஆ சட்டங்கள் பற்றித்
தெளிவாகக் கதைக்க முடியாமல் போனமை
கவலைக்குரிய விடயமாக இருந்தது.
உண்மையில்
ரிஸானாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்காக இஸலாமிய
ஷரீஆ தண்டிக்கப்படுவது (விமர்சிக்கப்படுவது) பிழையான ஒரு விடயமாகும்.
இந்த விடயத்தில் ஷரீஆச் சட்டத்தின் பெயரால்
சவூதி நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட முறையை
வேண்டுமானால் குறை கூறலாமே தவிர
ஷரீஆ சட்டத்தையல்ல என்பதைச் சொல்லிக் காட்ட வேண்டியுள்ளது.
இந்த இடத்தில் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள்,
அவை செயற்படுத்தப்படும் விதம் குறித்து ஒரு
சிறு விளக்கத்தைப் பெற்றுக் கொள்வது அவசியமாகிறது.
மனிதனின்
ஒழுக்கம் நிறைந்த, செழி ப்பான சமூக
வாழ்வுக்காக இறைவனால் அருளப்பட்ட சட்டதிட்டங்களே ஷரீஅத் சட்டதிட்டங்களாகும். ஷரீஆ
என்ற சொ ல்லைக் கேட்டதும்
பலர் கை வெட்டுதல், கால்
வெட்டுதல், கொலை செய்தல் முதலிய
கொடூரத் தண்டனைகளையே கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள்.
ஆனால் ஷரீஆ என்பது வெறும்
குற்றவியல் மட்டுமல்ல. மாறாக அது ஒரு
முழுமையான வாழ்க்கை நெறி. மனிதவாழ்வின் சகல
பகுதிகளையும் தழுவியது. வணக்கவழிபாடுகள், அன்றாட கொடுக்கல் வாங்கல்
நடவடிக் கைகள், குடும்பவியல், சமூகவியல்,
ஒழுக்கவியல் முதலிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட
வழிகாட்டல்கள் ஆகிய அனைத்தையும் ஷரீஆ
கொண்டுள்ளது. முழுமையான மனித வாழ்வுக்கான வழிகாட்டல்
என்றவகையில் ஜினாயாத் எனப்படும் குற்றவியல் பற்றியும் ஷரீஆ பேசுகின்றது. இங்கு
குற்றங்கள் பற்றி, அவற்றுக்கான காரணங்கள்
பற்றி, அவற்றை எவ்வாறு தடுக்கலாம்
என்பது பற்றியெல்லாம் ஆராயப்படுகின்றது.
இஸ்லாமிய
ஷரீஆவின் ஜினாயாத் எனும் குற்றவியல் பிரிவு
மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது:
ஹுதூத்
கிஸாஸ்
தஃஸீர்
அல்லாஹ்வும்
அவனது தூதரும் வரையறுத்துச் சொன்ன
குற்றங்களும் அவற்றுக்கான தண்டனைகளும் ஹுதூத் என்ற பிரிவுக்குள்
வருகின்றன. இதில் கொள்ளை, மது
அருந்துதல்,விபச்சாரம், அவதூறு, களவு, இஸ்லாத்தை
விட்டும் நீங்கி துரோகமிழைத்தல், நீதமான
ஆட்சிக்கு எதிரான சதி முயற்சி
ஆகிய குறிப்பிட்ட சில பாரிய குற்றங்கள்
மாத்திரமே உள்ளடங்குகின்றன.
இரண்டாவது
பிரிவான கிஸாஸ் பழிக்குப்பழி வாங்குதலுடன்
தொடர் பான குற்றங்களான கொலை,
காயம் உண்டாக்குதல் போன்ற குற்றங்களை உள்ளடக்குகின்றது.
இக்குற்றங்களுக் கான தண்டனைகளும் வரையறுக்கப்பட்
டவையாக இருந்தாலும் இங்கு உறவினர்களின் மன்னிப்புக்கும்
இடமளிக்கப்பட்டிருக்கின்றது.
மூன்றாவது
பிரிவான தஃஸீர் என்பதற்குள் மேலுள்ள
குற்றங்கள் தவிரவுள்ள ஏனைய குற்றங்கள் வருகி
ன்றன. இக்குற்றங்கள் எவையென வரையறுக்கப்படாதது போலவே
தண்டனைகளும் வரையறுக்கப்பட வில்லை. மனிதனால் புரியப்படக்
கூடிய பல்வேறு குற்றங்கள் - நூற்றுக்
கணக்கான குற்றங்கள் இதற்குள் வர முடியும். இக்
குற்றங்கள் எவை என்பதையும் அவற்றுக்கான
தண்டனை கள் எவை என்பதையும்
பாராளுமன்ற மும் தீர்மானிக்கலாம். நீதிமன்றமும்
தீர்மானிக்கலாம். சிறு புத்திமதி முதல்
மரண தண்டனை வரை தண்டனைகளும்
தீர்மானிக்கப்படலாம்.
இவ்விடத்தில்
ரிஸானாவுக்கு தூக்குத் தண்டனை கிடைப்பதற்குக் காரணமாய்
அமைந்த கொலைக் குற்றத்தைப் பற்றிய
ஷரீஆவின் நிலைப்பாட்டை மிகச் சுருக் கமாக
விளங்கிக் கொள்ளல் அவசிய மாகிறது.
கொலைக்
குற்றத்தை ஷரீஆ இரு வகையாகப்
பிரிக்கின்றது:
திட்டமிட்டுச்
செய்யப் படும் கொலை.
தவறுதலாக
இடம்பெற்று விடுகின்ற கொலை.
நியாயமான
எந்தக் கார ணமுமின்றி திட்டமிட்டுத்
தான் இந்தக் கொலை புரியப்பட்டுள்ளது
என ஒரு கொலைக் குற்றம்
நிரூபிக்கப் பட்டால் அதற்குத் தண்ட
னையாக பழிக்குப் பழி என்ற அடிப்படையில்
மரண தண்டனையே வழங்கப் படும். எனினும்
இது பாதிக் கப்பட்டவரின் உரிமை.
அதாவது கொலை செய்யப் பட்டவரின்
உறவினர் மன்னிப்பு வழங்குமி்டத்து நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு கொலை செய்தவர்
விடுதலை செய்யப்படலாம். எனினும் பாதிப்புக்குள்ளான உறவினர்கள்
மன் னிக் கவில்லை என்றால்
வேறு எவராலும் அதில் தலையீடு செய்யவோ
சிபார்சுகள் செய்யவோ முடியாது. இதுவே
நீதியானது. ஏனெனில் கொலை செயயப்
பட்டவரின் உயிரும் பெறுமதியானதே. இவ்வாறான
தண்டனை மூலமே கொலைக் குற்றம்
சர்வ சாதாரணமாக நடைபெறுவதைத் தடுத்திட முடியும் என்பதை நீதமாகச் சிந்திக்கும்
எவரும் ஏற்றுக் கொள்வர்.
இரண்டாவது
வகையான தவறுதலான கொலையைப் பொறுத்தவரை இதற் குரிய தண்டனையாக
நஷ்டஈடு மட் டுமே விதிக்கப்படுகின்றது.
கொலை யுண்டவரின் உறவினர்கள் எவ்வள வுதான் பிடிவாதமாக
இருந்தாலும் கொலைக்குக் கொலை என்பது இங்கு
கிடையாது.
குற்றம்
புரிந்தவரிடம் குற்றம் செய்யும் மனநிலை
காணப்பட்டுள்ளதா என்பதையே இங்கு ஷரீஆ கவனத்தில்
எடுத்துக் கொள்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. எனவே,
இஸ்லாமிய ஷரீஆவின் குற்றவியல் தண்டனை களில் மன்னிப்புக்கோ
மனித அறிவு க்கோ இடமில்லை
என்பது அறியாமை யால் விளைந்த
அபத்தமான குற்றச்சா ட்டாகும்.
பொதுவாக
ஒரு குற்றம் விசாரிக்கப் படும்
போது இரண்டு முக்கிய அடிப்
படை சட்டவிதிகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என
இஸ்லாமிய ஷரீஆ பணித்துள்ளது:
குற்றமற்ற
தன்மையே மனிதனின் அடிப்படையாகும். எனவே, குற்றம் சுமத்தப்பட்டவர்
அது நிரூபிக்கப்படும் வரை நிரபராதியாகவே கணிக்கப்பட
வேண்டும்.
ஒரு குற்றவாளி தப்பிவிடுவது பெரிய விடயமல்ல. ஆனால்,
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது.
மேலுள்ள
இரண்டு முக்கிய விதிக ளையும்
நோக்கினால் ஒரு குற்றத் திற்கான
தண்டனையானது மிக நுணுக்கமாக விசாரிக்கப்பட்டதன்
பின்னரே வழங்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய ஷரீஆ எந்தளவு கவனம்
செலுத்தியுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள
முடியும்.
சிலர் நினைத்திருப்பதைப் போல ஹுதூத் குற்றங்கள்
புரியப்பட்டவுடன் திடுதிடுப்பென அவற்றுக்கான தண் டனைகள் கண்மூடித்தனமாக
வழங் கப்பட்டு விடுவதில்லை. குற்ற மன நிலை,
குற்றம் புரிந்த சூழல், தூண்டிய
காரணிகள் முதலியவை மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்டதன்
பின்பு குற்றம் புரிந்த வருக்குப்
பாதகமாக இவையனைத்தும் அமைந்து குற்றவாளி சுய
பிரதிக்ஞையுடன்தான் குற்றம் புரிந்தார் என்பது
நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை நிறைவேற்ற
ப்படும். நபியவர்களின் சமுகத்தில் மாஸ் என்ற நபித்தோழரும்
காமிதிய்யா என்ற பெண்மணியும் தாம்
விபச்சாரக் குற்றம் புரிந்துவிட்டதாகத் தனித்
தனியாக முறையிட்டபோது நபிய வர்கள் நடந்து
கொண்ட முறையினைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
அவர்கள் முறையிடும் போது நபியவர்கள் பல
முறை முகத் தைத் திருப்பிக்
கொண்டமை, தண்டனை யை நிறைவேற்றுமாறு
அவர்கள் விடாப் பிடியாக நின்ற
போது அவர்கள் சுய அறிவுடன்
உள்ளார்களா எனப் பரிசோதிக்குமாறு தன்
தோழர்களுக்கு உத்தரவிட்டமை முதலிய நடவடிக்கை ளை
வைத்து இமாம்கள் ஷரீஆவின் நெகிழ்வுத் தன்மை குறித்து விரிவான
விளக்கங்களைத் தந்துள்ளார்கள்.
விபச்சாரக்
குற்றமொன்றை நிரூபிப் பதற்கு நேர்மையான நான்கு
சாட்சி யங்கள் தேவை. அல்லது
குற்றவாளி யின் மனப்பூர்வமான ஒப்புதல்
தேவை. நான்கு பேர் காணும்
அளவுக்கு பகிரங் கமாக விபச்சாரக்
குற்றம் நிகழ்வது மிகவும் குறைவு. இங்கு
மூன்று சாட் சியங்கள் ஒழுங்காக
அமைந்து நான்கா வது சாட்சியத்தில்
சிறிது சந்தேகம் இருந்தாலும் அதன் சாதகம் குற்றவாளிக்
குச் சார்பாக்கப்பட்டு உரிய தண்டனை தவிர்க்கப்படும்.
ஒரு குற்றத்தைப் புரிவதற்கு சூழல் ஒரு முக்கிய
தூண்டியாக அமைகின்ற போது அக்குற்றத்துக்குரிய ஹுதூத்
தண்டனை தவிர்க்கப்படுவதும் ஷரீஆ வில் உண்டு.
உமர் (ரழி) அவர்கள் பஞ்ச
காலத்தில் திருட்டுக் குற்றத்துக் கான கரச்சேதனத் தண்டனையைத்
தவிர்த்தமை இதற்கு சிறந்த எடுத்துக்
காட்டாகும். ஆபாச சூழல் தலை
விரித் தாடுகின்ற போது விபச்சாரத்திற்குரிய ஹுதூத்
தண்டனை தவிர்க்கப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குற்றமொன்று
தீர விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்காக பலமுறை அதனை மீள்விசாரணை
செய்யவும் அதற்காக இக்காலத்தில் உள்ளது
போல் படித்தரமான நீதிமன்ற அமைப்பை ஏற்படுத்தி மேன்முறையீடு
செய்யவும் இஸ்லாமிய ஷரீஆவில் தாராளமாக அனுமதி உண்டு என்பது
இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.
இவ்வாறான
ஒரு சுருக்கமான பின்னணியில் றிஸானாவுக்கு வழங்கப் பட்ட தண்டனையை
நாம் நோக்கினால் சில தெளிவுகளுக்கு எம்மால்
வர முடியும்.
இங்கு இஸ்லாமிய ஷரீஆவைச் சரி வரப் புரியாதவர்களிடம்
மேலோங்கி நிற்கும் வினா என்னவெனில் ஷரீ
ஆவின் தண்டனையில் ஏன் இந்தளவு கடின
தன்மை காணப்படுகின்றது, அதில் எவ்வித விட்டுக்
கொடுப்புக்கும் இடம் கிடையவே கிடையாதா,
மன் னிக்கும் பண்பு என்பதே ஷரீஆவின்
இலக்கணத்தில் மருந்துக்கும் இல் லையா? என்பதுதான்.
பெரும் பாலியல் வல்லுறவு, வெறித்தனமான
கொலை முதலிய குற்றங்களுக்கு மரண
தண்டனை என்றால் அது நியாய
மானதுதான். ஆனால் இந்தச் சிறிய
பிள்ளைக்கு அதுவும் தெரியாத்தனமாக, தவறுதலாக
நடந்த ஒரு மரணத்துக்காக தூக்குத்
தண்டனை வழங்கியது கொடூரமில்லையா? என்ற அடிப்படையிலேயே பலரும்
ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
ரிஸானா
நபீக்கினால் புரியப்பட்ட குற்றம் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்ட
ஒன்று என்ற அடிப்படையிலேயே சவூதி
நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையை விதித்திருக்கிறது.
பின்பு இதனை ரியாத் உயர்
நீதிமன்றமும் ஊர்ஜிதம் செய்திருக்கிறது.
ஆனால்,
இந்த இடத்தில்தான் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் எனச்
சொல்லப்படுகின்றது. குழந்தைப் பராமரிப்புக்கான தனியான பயிற்சி பெறாத
சிறுமியிடம் சிசுவுக்குப் பாலூட்டும் பொறுப்பை வழங்கியமை, பொலிசாரின் தாக்குதல், வாக்குமூலம் பெறப்பட்டமுறை, மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட
தவறுகள், விசாரணையில் விடப்பட்டதாகச் சொல்லப்படும் தவறுகள், கீழ் நீதிமன்றத்தில் விசாரணை
செய்த அதே நீதிபதிகளே உயர்நீதிமன்றத்திலும்
மேன்முறையீட்டை விசாரணை செய்ததாகச் சொல்லப்படுகின்றமை
முதலியன றிஸானா அநியாயமாகத் தண்டிக்கப்பட்டு
விட்டாரோ என்ற ஆதங்கத்தைக் கடுமையாகத்
தோற்றுவித்திருக்கிறது. இதுவே உண்மை என்றால்
இது புனிதமான இஸ்லாமிய ஷரீஆவின் தவறு அல்ல. இது
மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட தவறு. தகுந்த முறையில்
ஒழுங்காக குற்றத்தை விசாரணை செய்யாமல் தண்டனை
வழங்கியதற்காக அல்லாஹ்வினால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்
என்பது திண்ணம். குர்ஆனின் பல்வேறிடங்களில் நீதமாக நடந்து கொள்ளுமாறு
கட்டளையிடும் அல்லாஹுத்தஆலா நீதம் தவறுகின்ற போது
கிடைக்கும் தண்டனை கடுமையானது என்பது
பற்றியும் எச்சரிக்கை செய்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய
ஷரீஆவைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் பரப்பப்படும்
இக்கால கட்டத்தில் அது ஒரு குறுகிய
கோணத்தில் நோக்கப்படுவதைத் தவிர்க்கவும் அதன் பரந்துபட்ட நிறைவான
சிறப்பம்சங்கள் பற்றிய தெளிவுகளை சகோதர
இன மக்களிடையே ஏற்படுத்தவும் எம்மால் முடியுமான முயற்சிகளை
எடுத்தல் வேண்டும். அத்தோடு இந்த நிகழ்வுக்கு
மட்டுமல்ல இதனைப் போன்று எண்ணற்ற
இளம் பெண்கள் வெளிநாடுகளில் சொல்லொணாத்
துன்பங்களுக்கு முகங் கொடுத்துக் கொண்டு
சீரழியவும் காரணமாக அமைந்த வறுமையை
சமூகத்தை விட்டும் விரட்டுவதற்கு புனித ஷரீஆ காட்டித்
தரும் ஸகாத், ஸதகா முதலிய
கடமைகளை நிறைவேற்ற முன்வருவோம்.
பல முறை ஹஜ் செய்யவும்
உம்றா செய்யவும் நாம் செலவழிக்கும் பெருந்
தொகைப் பணத்தை இதற்காக நாம்
பயன்படுத்தினால் அதனை விட அதிக
நன்மை கிடைப்பதுடன் ஷரீஆவுக்கு மாற்றமாக எமது பெண்கள் தனியாக
வெளிநாடு செல்வதையே நாம் தவிர்த்து விடலாம்
என்பதையும் நாம் உணர்ந்து செயற்பட
முன்வருவோம்.
அஷ்ஷெய்க்
யூ.கே. அப்துர் ரஹீம்
(நளீமி)
ConversionConversion EmoticonEmoticon