ஆயுள் தண்டனை அனுபவிக்கும் குடும்பப்
பெண்ணின் சோகக் கதை
வெலிக்கடை
சிறைச்சாலைக்குள் அடைபட்டிருக்கும் பெண்
கைதிகளை சமூகத்தில் உள்ளவர்கள் குற்றமிழைத்தவர்கள் நடத்தை கெட்டவர்கள் என்றெல்லாம்
வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே இருப்பார்கள்.
ஆனால் அவர்களின் உண்மைக்கதையை கேட்டறியும் பொழுது அவ்விதம் அந்தப்
பெண்கள் மீது வெறுப்புணர்வைக் கொண்டவர்கள்
கூட மனம் வருந்துவார்கள்.
இந்த சிறைப்பறவைகளை சந்தித்து அவர்களுடன் மனம்விட்டு பேசுவதற்காக நாம் நிரூஷி விமலவீர
என்ற எங்கள் நிருபரை வெலிக்கடை
சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தோம்.
நிரூஷி
விமலவீர தான் அங்கு சந்தித்த
பெண்களின் அவலங்களை இவ்விதம் விவரிக்கிறார்.
“நான் சந்தித்த முதல் பெண் கைதி
. . . . . . . . . 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம்
திகதியன்று உயர்நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது.
தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் இந்தப் பெண் நீதிமன்றத்தில்
நான் இரண்டரை மாத கர்ப்பிணி
என்பதை நீதிபதிக்கு அறிவித்தார்.
அதையடுத்து
நீதிபதி இந்தப் பெண்ணின் நிலை
குறித்து மூன்று நாட்களுக்குள் வைத்திய
அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
இந்தப்
பெண் கர்ப்பிணி என்பது வைத்திய அறிக்கைகள்
மூலம் ஊர்ஜிதமானதை அடுத்து அந்தப் பெண்ணின்
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக நீதிபதி
மனிதாபிமான காரணங்களுக்காக குறைத்தார்.
இதனையடுத்து
மரண தண்டனை கைதிகளின் பிரத்தியேக
பிரிவுக்கு இந்தப் பெண் மாற்றப்பட்டார்.
இதனால் மன அழுத்தத்திற்கு உட்பட்ட
இப்பெண் தற்கொலை செய்வதற்கும் முயற்சி
செய்தார். என்றாலும் காலப்போக்கில் அந்தப் பெண் ஒரு
ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
2012 பெப்ரவரி
21ம் திகதியன்று இவளுக்கு ஆண் குழந்தை சிறைச்சாலையில்
பிறந்தது முதல் இந்த பெண்ணுக்கு
வாழ வேண்டுமென்ற ஆசை மனதில் வலுவூன்றியது.
அதையடுத்து மகப்பேற்று பிரிவுக்கு குழந்தையும் இந்தப் பெண்ணும் மாற்றப்பட்டார்கள்.
இந்தப்
பெண்ணுக்கு மேலும் 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். கவர்ச்சிகரமான உடல் தோற்றத்தையும் அழகான
முகவெட்டையும் கொண்ட இந்த அப்பாவி
பெண் தன் வசம் 140 கிராம்
ஹெரோயின் என்ற போதைவஸ்தை கைவசம்
வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தான் இவருக்கு
மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொழும்பு
வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு
இப்போது வயது 35. 19வயதில் திருமணம் செய்த
இவர் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார். அவரது கணவன் தனக்கு
சொந்தமான முச்சக்கர வண்டியில் காய்கறி விற்பனை செய்து
வந்துள்ளார். இந்த முச்சக்கரவண்டியை இவரது
கணவன் தெரியாத்தனமாக குடு அஜித் என்ற
போதைவஸ்து விற்பனையாளரிடம் இருந்து வாங்கியிருக்கிறார்.
இதனால்,
தனது கணவன் மீதும் தன்
மீதும் பொலிஸாரின் சந்தேகம் திரும்பியதை அடுத்து அவர்கள் தன்னை
கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு
அழைத்துச் சென்று நீங்கள் தான்
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபடுகின்aர்கள் என்று குற்றம்சாட்டினார்கள்.
அதையடுத்து இடம்பெற்ற நீதி விசாரணையின் பின்னர்
எனக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பொலிஸார்
ஆரம்பத்தில் அவரது கணவனை அல்லது
அவரது நண்பர் வந்து ஆஜரானால்
இந்த பெண்ணை விடுவிப்பதாக தெரிவித்த
போதிலும் கணவரோ அல்லது அவருடைய
நண்பரோ பொலிஸ் நிலையத்திற்கு வராத
காரணத்தினால் என்னை வெலிக்கடை சிறைச்சாலைக்கு
கொண்டு சென்றனர்.
நான் வெலிக்கடை சிறைச்சாலையில் மூன்று மாதங்கள் இருந்தேன்.
இக்காலப்பகுதியில் என்னை பார்ப்பதற்கு என்னுடைய
கணவரோ அல்லது பிள்ளைகளோ, எனது
உறவினர்களோ வரவில்லை. இவ்வேளையில் என்னுடைய கணவரின் நண்பர் பல்வேறு
சிரமங்களுக்கு மத்தியில் என்னை சரீரப் பிணையில்
சிறைச்சாலையில் இருந்து வெளியில் எடுத்தார்.
இவ்வாறு
சிறையில் இருந்து வெளியில் வந்த
நான் எனது கணவருடன் மீண்டும்
இல்லற வாழ்க்கையில் இணைந்து கொண்டேன். நான்
சிறைச்சாலையில் இருந்து வந்தவுடன் எனது
இரண்டாவது மகனை பெற்றெடுத்தேன்.
இது இவ்வாறு இருக்க, நான்
13 வருடங்களாக என் மீது சுமத்தப்பட்ட
குற்றத்திற்காக நீதிமன்றத்திடம் போராடிக் கொண்டிருந்தேன். வழக்கு விசாரணைகளில் பல்வேறு
சிரமங்களையும் எதிர்நோக்கினேன்.
இந்த
13 வருடங்களில் எங்களது குடும்ப வாழ்க்கை
மிகவும் சந்தோசமாக இடம்பெற்றதுடன் நான் மேலும் இரண்டு
பிள்ளைகளை பெற்றெடுத்தேன். மூன்றாவதும் நான்காவதும் பிள்ளைகள் பெண் பிள்ளைகளாகும்.
இக்காலப்பகுதியில்
எனது மூத்த மகளுடன் மகனும்
பாடசாலை காலத்தை ஆரம்பித்தனர். தற்போது
என்னுடைய மூத்த மகளுக்கு 15 வயதாகின்றது.
எனது மகன் கொழும்பிலுள்ள பிரபல
ஆண்கள் பாடசாலையில் கல்வி பயில்கின்றான்.
இவ்வாறு
வாழ்ந்து கொண்டிருக்கையில் எனது கணவரின் நண்பர்
எங்களுக்கு கொழும்பில் ஆடம்பர வீட்டை நிர்மாணித்து
கொடுத்ததுடன் எனது கணவருக்கு ஒரு
முச்சக்கர வண்டியையும் பெற்றுக் கொடுத்தார். அதுமாத்திரமின்றி எனது வழக்கு விசாரணைக்காக
ஒவ்வொரு தடவையும் நிதி உதவி வழங்கியதுடன்
பிள்ளைகளின் கல்விக்கும் உதவி புரிந்தார்.
என் மீதான வழக்கு விசாரணையில்
நான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் நிரூபித்ததை
அடுத்து 2011ம் ஆண்டு ஜூன்
மாதம் 21ம் திகதி என்னை
மீண்டும் கைது செய்து வெலிக்கடை
சிறைச்சாலையில் தடுத்து வைத்தனர்.
என்னுடைய
வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக போதைப்பொருள் வியாபாரம் காணப்படுகின்றது. ஏனெனில் எனக்கு அப்போது
போதைப்பொருள் என்றால் என்னவென்றே தெரியாது.
அவ்வாறு இருக்கும் போது நான் கைது
செய்யப்பட்டு குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டிய அவல
நிலை எனக்கு ஏற்பட்டது. ஆனால்
போதைப் பொருள் என்றால் என்ன
என்பதை இப்போது நான் அடையாளம்
கண்டு கொண்டேன் என்றார்.
இவ்வாறு
சிறைச்சாலைக்கு வந்தபோது நீதிமன்றம் எனக்கு மரண தண்டனையை
விதித்தது. அப்போது நான் ஐந்தாவது
பிள்ளைக்கு தாயாகப் போகிறேன் என்பதை
தெரிந்து கொண்டதை அடுத்து எனக்கு
ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
நான் குற்றவாளியாக இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து என்னை பார்ப்பதற்காக எனது
குடும்பத்தினர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெலிக்கடை
சிறைச்சாலைக்கு வருகை தருவார்கள். இதன்
போது என்னுடைய பிள்ளைகளுடன் ஒரு சிறு நேரத்தை
கழிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுமாத்திரமின்றி வருடத்தில் மூன்று நாட்கள் குடும்பத்தாருடன்
ஒன்றாக இருக்கும் வாய்ப்பும் கிடைக்கின்றது.
குறிப்பாக
நத்தார் தினம், பெண்கள் தினம்
மற்றும் புதுவருட நிகழ்வுகளின் போது எனது குடும்பத்தினருடன்
ஒன்றாக இருந்து உண்டு மகிழும்
வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறான ஒரு நாளை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.
பெண்களுக்கு
கணவனே கண் கண்ட தெய்வம்
என்பார்கள். ஆனால், என்னுடைய கணவன்
ஆபத்து வேளையில் என்னை நட்டாற்றில் விட்டுவிட்டு
தலைமறைவாகி விட்டார். அவரால் தான் நான்
இன்று ஆயுள் சிறைத்தண்டனையை அனுபவிக்கிறேன்.
இவர் எனது கண்கண்ட தெய்வமல்ல.
என்னைக்காட்டிக் கொடுத்த தெய்வம் என்று
தான் சொல்ல வேண்டும் என்று
இந்த அபலைப் பெண் தனது
சோகக் கதையை முடித்தாள்.
நிரூஷி
விமலவீர...-
ConversionConversion EmoticonEmoticon