சுமார்
60 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கருதப்படும்
அரியவகை விலங்கினமான டைனோசர்கள் தற்போது முற்றிலுமாக அழிந்து
விட்டன. எனினும், உலகில் உள்ள சில
இடங்களில் காணப்படும் டைனோசர் முட்டைகளின் படிமத்தை
வைத்து அந்த பகுதியின் தொன்மையையும்
வரலாற்றையும் ஆராய்ச்சியாளர்கள் கணித்து வருகின்றனர்.
இவ்வகையில்,
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார்-மண்ட்லா
பகுதியில் ஏராளமான டைனோசர் முட்டைகள்
பூமிக்குள் புதையுண்டு கிடக்கின்றன.
இங்குள்ள
பாட்லா கிராமத்தை சேர்ந்த ஆதிவாசிகளின் துணையுடன்
இந்த முட்டைகளை தோண்டி எடுக்கும் ஒரு
கும்பல், இவற்றை ராஜஸ்தான், மகாராஷ்டிரா,
குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்துவரும்
வியாபாரிகளுக்கு ஒவ்வொரு டைனோசர் முட்டையையும்
ரூ.500க்கு விலைபேசி விற்றுவிடுவதாக
கூறப்படுகிறது.
சர்வதேச
சந்தையில் ஒரு டைனோசர் முட்டை
ரூ. 1 கோடி வரை விலைபோகும்
என்று கூறுகின்றனர். பாட்லா கிராமத்தில் டைனோசர்கள்
வாழ்ந்ததாக கருதப்படும் சுமார் 89 ஹெக்டேர் நிலப்பகுதி, போதிய பாதுகாப்பின்றி இருப்பதால்
தான், சமூகவிரோதிகள் சிலர் இந்த வியாபாரத்தில்
மூலம் லாபம் அடைய முயற்சிக்கின்றனர்
என சமூக ஆர்வலர்கள் கருத்து
தெரிவிக்கின்றனர்.
ConversionConversion EmoticonEmoticon