இப்போது எல்லாமே தீவிர வாதமாகிய காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். சமயத் தளங்களின் புனிதத்தன்மை மறந்து செயற்படும் மனிதர்களே இன்று அதிகமாக காணப்படுகின்றன..
பிரான்ஸில்
தீவிர வலது சாரிகள் பள்ளிவாசலுக்குள்
ஊடுருவி ஆர்ப்பாட்டம்
மேற்கு
பிரான்ஸின் வரலாற்று பிரசித்திபெற்ற பொயின்டியஸிலுள்ள பள்ளிவாசலுக்குள் ஊடுருவி தீவிர வலது
சாரியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸில் அதிகரித்துவரும் முஸ்லிம் குடியேற்றத்திற்கு இவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
பிரான்ஸின்
பல பகுதிகளில் இருந்து கடந்த சனிக்கிழமை
பொயின்டியஸ் நகரில் ஒன்றுதிரண்ட 73 ஆர்ப்பாட்டக்காரர்கள்
அங்கிருக்கும் பள்ளிவாசலுக்குள் ஊடுருவியுள்ளனர். அங்கு தொழுகையில் ஈடுபட்டோரை
இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பள்ளிவாசலின்
மொட்டைமாடிக்கு சென்று பதாகைகளை ஏந்தி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள்
தம்முடன் கூடாரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களையும் கொண்டு
சென்றுள்ளனர். இவர்கள் மொட்டைமாடியில் மினாரத்திற்கு
அருகில் நின்று கோஷமெழுப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடுவதை பிரான்ஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் தம்மை பூர்வீக உரிமை
கொண்டவர்கள் என குறிப்பிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்
தமது பதாகையில் 732 என்ற இலக்கத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்மூலம் 732 ஆம் ஆண்டு பிரான்ஸிற்கு
படையெடுத்த முஸ்லிம்களை தடுத்து நிறுத்திய மன்னர்
சார்லஸ் மார்டலை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும்
ஒருசில மணிநேரத்தில் அங்கு வந்த பொலிஸார்
ஆர்ப்பாட்டக் காரர்களை கலைத்ததோடு மூவரை கைது செய்துள்ளனர்.
இதில் பள்ளிவாசலில் போடப்பட்டிருந்த 10 காபட்களையும் மொட்டைமாடிக்கு எடுத்துச் சென்று சேதமாக்கியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்
தரப்பில் பேசிய ஒருவர் தாம்
பள்ளிவாசலில் நீண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு
திட்டமிட்டதாகவும் பொலிஸார் தலையீட்டால் கவலையான முடிவை சந்தித்ததாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முஸ்லிம் அமைப்பு கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளது. வலதுசாரி இயக்கத்தினரின் இன எதிர்ப்பு உணர்வையும்,
பகையையும் முற்றிலும் ஒடுக்க வேண்டும் என
அந்த அமைப்பு அரசிடம் கோரிக்கை
விடுத்துள்ளது.
மேற்கு
ஐரோப்பாவில் அதிக முஸ்லிம் சனத்தொகை
கொண்ட நாடாக பிரான்ஸ் காணப்படுகிறது.
இங்கு சுமார் 5 மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். எனினும் முஸ்லிம் சனத்தொகை
குறித்து அந்நாட்டு அரசு உத்தியோகபூர்வ தரவை
வெளியிடவில்லை. எனினும் முஸ்லிம் சனத்தொகைக்கு
ஏற்ப அங்கு போதிய பள்ளிவாசல்கள்
இல்லை. அதனால் சிறிய நிலவறைகள்,
வீதிகள் மற்றும் கட்டிடங்களில் தொழுகை
நடத்தி வருகின்றனர்.
ConversionConversion EmoticonEmoticon