திமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப முடியுமா?



பெலுகா வகை திமிங்கிலங்கள் மனிதர் போன்று சப்தமிடுவதைக் கண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுவாக டொல்பின் மீன்களே மனிதர்கள் போன்று ஒலி எழுப்புவதாக நம்பப்பட்டு வந்தது. எந்த விலங்கும் இவ்வாறு தன்னிச்சையாக மனிதர் போன்று ஒலி எழுப்புவதில்லை.

ஆனால் திமிங்கிலங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்திவரும் அமெரிக்காவின் தேசிய கடல் பாலூட்டி அமைப்பு பெலுகா வகை திமிங்கிலங்கள் மனிதர் போன்று சப்தம் எழுப்புவதை கண்டறிந்துள்ளனர். இந்த திமிங்கிலங்கள் வாய் மூடிய நிலையில் மெதுவாக மனிதர்களைப் போன்று சப்தமிடுவதாக கூறியுள்ளனர்.

மனிதர்கள் சப்தத்தை ஞாபகம் வைத்து அதுபோன்று பேசுவதற்கு அவைகள் தனது குரல்வளை அமைப்புகளை மாற்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பேசுவதற்கு ஏதுவான அமைப்பை பெற்றுள்ள இந்த திமிங்கிலங்களை மனிதர் போன்று ஒலி எழுப்பப் பழக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றும் ஆராய்ச்சியா ளர்கள் கூறியுள்ளனர்.
Previous
Next Post »

More News