பூமியை
தாக்கும் விண்கற்களை அழிக்க ரொக்கெட் தயாரிக்கும்
ரஷ்யா
பூமியை
தாக்கி மிகப் பெரிய பாதிப்பை
ஏற்படுத்தக் கூடிய விண்கற்களை அழிப்பதற்காக
விண்ரொக்கெட்டுகளை தயார் செய்ய ரஷ்யா
திட்டமிட்டுள்ளது.
பூமியை
தாக்கி மிகப் பெரிய அளவில்
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விண்கற்கள் விண்வெளியில் இருக்கக் கூடும். அவற்றை பூமிக்கு
வெளியே விண்வெளி யிலேயே மறித்து வெடிக்கச்
செய்வதன் மூலம் திசை திருப்பவோ
அல்லது முழுவதுமாகவோ அழிக்கக் கூடிய விண்ரொக்கெட்டுகளை தயாரிப்பதற்கு
ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை
ரஷ்யாவின் பிரதான விண்கல மற்றும்
விண்வெளி ஆய்வு அமைப்பான எனர்ஜியா
அறிவித்துள்ளது. விண்வெளியில் அபொபிஸ் உட்பட மிகப்பெரிய
3 விண்கற்களின் பயணப்பாதை பூமியின் சுற்றுப் பாதையில் இன்னும் சில தசாப்தங்களில்
குறுக்கிட உள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது.
பூமியின்
சுற்றுப் பாதைக்குள் வரும் இந்த விண்கற்கள்
பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக் கூறு மிக அதிகமாகவே
உள்ளது. இதனால் இவற்றை வழியில்
மறித்து சிதைக்காமல் விட்டால் அவை மிகப் பெரிய
அழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதுடன் கடலில்
இவை முழுமையாக விழுந்தால் சுனாமி ஏற்படக் கூடும்
எனவும் எச்சரிக்கப் படுகின்றது.
அபொபிஸிற்கு
சமனான குறுங்கோள் ஒன்றுடன் மோதி அதன் பயணப்
பாதையை மாற்றுவதற்கு 70 தொன் டி. என்.
டி. வெடிமருந்துடன் கூடிய ஏவுகணை வெடிபொருள்
தேவைப்படுகின்றது. எனவே இந்த விண்கல்லை
திசை திருப்ப ஆர். டி.
171 ரக ஏவுகணையால் முடியும் எனவும் எனர்ஜியா இவற்றை
இன்னமும் மூன்று அல்லது ஐந்து
வருடங்களில் தயா ரித்து விடும்
எனவும் லொபொட்டா கூறி யுள்ளார். மேலும்
கூறுகையில் இந்த ஏவுகணைகளை தாம்
ட்சார் என்ஜின்ஸ் என அழைப்பதாகவும் இந்த
ரக ஏவுகணைகளை இதுவரை வேறு எந்த
நாடும் செய்ததில்லை எனவும் கூறியுள்ளார்.
ConversionConversion EmoticonEmoticon