இஸ்ரேல்
நட்பில் இருவரும் ஒருமித்த கருத்து
அமெரிக்க
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாவுக்கும்,
குடியரசு கட்சி வேட்பாளர் மிட்
ரொம்னிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி விவாதம்
நிறைவடைந்துள்ளது.
புளோரிடாவில்
நேற்று முன்தினம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து வெளிநாட்டு
கொள்கைகள் குறித்து விவாதித்தனர். இதன்போது அரபு மக்கள் எழுச்சி,
ஈரான், இஸ்ரேல் மற்றும் சீனா
தொடர்பில் இருவரும் காரசாரமாக விவாதித்தனர்.
எனினும்
கொள்கை அளவில் ஒபாமா இது
வரை நிறைவேற்றிக் கொண்டிருப்பதையே ரொம்னி திரும்பவும் பேசியதால்
கிட்டத்தட்ட ஒபாமாவை வழி மொழிந்தது
போல் அமைந்தது. முதன் முறையாக ஒசாமா
பின்லாடனை ஒழித்துக்கட்டியதற்காக ஒபாமாவுக்கு ரொம்னி வாழ்த்தும் கூறினார்.
இந்த விவாதத்தில் ஒபாமா வெற்றி பெற்றதாகக்
கருத்து கணிப்புகள் கூறின.
இருவருமே
இஸ்ரேல் எங்கள் நட்பு நாடு,
அவர்களுக்கு ஆபத்து என்றால் அமெரிக்கா
கொதித்தெழும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
ஒபாமா ஒரு படி மேலே
போய் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவை வலியுறுத்திப் பேசியதோடு
மட்டுமல்லாமல் இஸ்ரேலுக்கு எதிராக யார் போர்
தொடுத்தாலும் அமெரிக்கா உடனடியாக பதிலடி கொடுக்கும் என்றார்.
சிரியா
குறித்து பேசிய ஒபாமா லிபியா,
துனீசியா எகிப்து ஆகிய நாடுகளில்
எவ்வாறு அதிக செலவில்லாமல் நாடுகள்
விடுதலை அடையச் செய்து பாதுகாப்பான
நபர்களின் ஒப்படைத்தோமோ அதே போல சிரியாவிலும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சரியான நேரத்தில் தக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒபாமாவின்
தவறான அணுகுமுறையால் ஈரான் ஆயிரக்கணக்கில் அணுகுண்டு
தயாரித்து வருவதாகவும் இன்னும் நான்கு ஆண்டுகளில்
அவை முழுமை அடைந்து விடுவதாகவும்
மத்திய ஆசிய நாடுகள் அனைத்தும்
ஆபத்தில் இருப்பதாகவும் ரொம்னி கூறினார்.
அடுத்து
பேசிய ஒபாமா “கடுமையான பொருளாதார
கட்டுப்பாட்டின் மூலம் ஈரானின் பணமதிப்பு
80 சதவீதம் சரிந்துவிட்டது. எண்ணெய் உற்பத்தி இருபது
வருடங்களுக்கு முந்தைய அளவுக்கு குறைந்துவிட்டது.
ரொம்னியோ ஈரானுடன் வர்த்தகம் செய்யும் சீனாவின் எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு
செய்துள்ளார் அவரா ஈரானுக்கு எதிரான
நிலை ஏற்பார் என நம்புகிaர்கள்.
இப்போது
ஈரானுக்கு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். இதை அவர்கள் உபயோகித்துக்
கொள்ள வில்லையென்றால் உலக நாடுகள் ஒன்றிணைந்து
எனது தலைமையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும்
எடுக்க தயங்க மாட்டோம். எனது
தலைமையில் அமெரிக்கா இருக்கும் வரை ஈரானில் அணுகுண்டு
என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அழுத்தமாக கூறினார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து
படைகள் வெளியேறுவது குறித்த விவாதத்தில் பாகிஸ்தானை
அமெரிக்கா கைவிட்டு விடக்கூடாது. பாகிஸ்தானின் அணுகுண்டுகள் தீவிரவாதிகள் கைக்கு போய்விடும் ஆகவே
அவர்களுக்கு பண உதவி கொடுத்து
கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று
ரொம்னி கூறினார்.
ஒபாமாவோ
“நாம் ஆப்கானிஸ்தானுக்கு ஏன் போனோம் என்பதையே
இன்றைக்கு மறந்து விட்டோம் போலிருக்கிறது.
ஒசாமா பின்லேடனைத் தேடித்தான் அங்கு சென்றோம். அந்த
வேலை முடிந்து விட்டது. அல்கொய்தாவின் பலம் குறைக்கப்பட்டுள்ளது. ஆப்கான் அரசு
தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் உள்ளூர் படைகளுக்கு
பயிற்சி கொடுத்திருக்கிறோம்.
அவர்கள்
பாதுகாப்பிற்காக அமெரிக்க வீரர்கள் பலியாவதை ஏற்க முடியாது சென்ற
வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு படைகள் திரும்பப்பெறப்படும் என்றார்.
சீனா தான் அமெரிக்காவுக்கு அடுத்த
தலைவலியாக உருவெடுக்கும் என இருவருமே கருத்துத்
தெரிவித்துள்ளனர். பணமதிப்பை குறைத்து காட்டுவதன் மூலம் அமெரிக்க வேலைகளுக்கு
உலை வைத்து வரும் சீனாவை
நாணய கட்டுப்பாடு விதித்து முடிவுக்கு கொண்டு வருவேன் என்றார்
ரொம்னி.
ஒபாமாவோ
சீனாவின் முறையற்ற வர்த்தகத்தை நான் ஏற்கனவே கட்டுப்படுத்தி
இருக்கிறேன். பென்சில்வேனியா ஓஹயோ உறுக்கு நிறுவனங்களுக்கு
ஏற்றுமதியை அதிகாரிக்கச் செய்துள்ளேன். சீனாவின் போலி டயர் உற்பத்தியை
தடுத்து நிறுத்தி அமெரிக்க டயர் நிறுவனங்களை காப்பாற்றியுள்ளேன்.
டயர் நிறுவன விவகாரத்தில் எனக்கு
எதிர்ப்பு தெரிவித்தது அதே ரொம்னி தான்
எனது ஆட்சியில் சீனாவுக்கான ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்துள்ளது
என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர்
6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நன்றி தினகரன்
ConversionConversion EmoticonEmoticon