இத்தாலியில்
கடந்த 2009 பூமி அதிர்ச்சி குறித்து
முன்னெச்சரிக்கை விடுக்காத குற்றத்திற்காக 6 விஞ்ஞானிகள் மற்றும் ஒரு முன்னாள்
அதிகாரிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத் தண்டனை
விதித்துள்ளது.
பாரிய பூமியதிர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்க இந்த விஞ்ஞானிகள்
தவறியதாக நீதிபதி தனது தீர்ப்பில்
குறிப்பிட்டுள்ளார். இத்தாலியில் கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட
6.3 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சியில் 309 பேர் கொல்லப்பட்டனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற கட்டடங்களும் சேதமடைந்தன.
இந்த பூமியதிர்ச்சிக்கு பல மாதங்களுக்கு முன்னரே
குறித்த பகுதியில் சிறு அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இதில் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள விஞ்ஞானிகளுக்கு பூமியதிர்ச்சியில் ஏற்பட்ட சேதத்திற்கு நீதிமன்றம்
அபராதம் விதித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு சர்வதேச
விஞ்ஞானிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகளுள் சர்வதேச அளவில் மதிக்கப்படும்
புவியியல் நிபுணர் என்சோ பொஸ்சியும்
அடங்குகிறார்.
ConversionConversion EmoticonEmoticon