2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள்ள துனீஷியா மக்கள்


2013 ஜூனில் துனீஷியாவில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் துனீஷியாவில் அடுத்த ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை நடத்த ஆளும் இஸ்லாமியாவாதிகளின் அன் ஹதா கூட்டு அரசு தீர்மானித்துள்ளது.

அன் ஹதா கட்சி தேர்தலை தவிர்த்து தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முயற்சிப்பதாக எதிர்த் தரப்பினர் விமர்சித்துவரும் நிலையிலேயே தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துனீஷிய ஜனாதிபதி நேரடி மக்கள் வாக்கின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு ஆரம்பமாக இருந்த துனீஷியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடந்த தேர்தலில் அன் ஹதா முன்னணி வெற்றிபெற்றது.

அந்த முன்னணி மதசார்பற்ற இரு கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் 2013 ஜூன் 23 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல் ஜூலை 7 ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தீர்மானத்திற்கு ஆளும் கூட்டு அரசை பெரும்பான்மையாக கொண்ட சட்டவாக்க மன்றத்தின் அனுமதி பெறவேண்டும்.
Previous
Next Post »

More News