உள்ளாட்டுக் கலவரத்தால் சிதைந்து போயியுள்ள மாலி நாட்டு மக்கள் அங்கு தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பால் அவஸ்தைப்படுகிறார்கள். இந்த தீவிரவாதிகளின்
ஆக்கிரமிப்பில் உள்ள மாலியின் வடக்கு
பகுதியை மீட்க ஐ.நா.வில் ஒருமனதாகத் தீர்மானம்
நிறைவேற்றப்ப ட்டது.
சர்வதேச
இராணுவ உதவியுடன் மேற்கு ஆபிரிக்க நாடுகள்
இந்நடவடிக்கையை எடுக்க ஐ.நா.
வலியுறுத்தியு ள்ளது.
வடக்குப்
பகுதியில் நிலவும் அசாதாரண சூழலைக்
கட்டுப்படுத்தி அரசியல் ரீதியில் தீர்வுகாண
அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலியின் வடக்குப் பகுதியில் அமை தியை ஏற்படுத்தும்
முயற்சியானது அந்நாட்டின் இறையாண்மையைக் காக்கும் வகையிலும் பிராந்திய ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்று
ஐ.நா. உறுப்பினர்கள்
எச்சரித்துள்ளனர்.
மேற்கு
ஆபிரிக்க நாடான மாலியில் கடந்த
மார்ச் மாதம் நடந்த இராணுவ
நடவடிக்கையின் போது அந்நாட்டு ஜனாதிபதி
டெளமனி டெளரியை வெளியேற்றிவிட்டு தலைநகர்
பமாகோவை இராணுவத்தினர் கைப் பற்றினர். அப்போது,
மாலியின் வடக்கு மற்றும் கிழக்குப்
பகுதியை அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தவ்ரக் ஆயுதக் குழுவினர்
ஆக்கிரமித்தனர்.
ConversionConversion EmoticonEmoticon