கடந்த வருடம் கல்விப் பொதுத்
தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல்
இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக இலங்கை
ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பரீட்சையில்
சித்தியடைந்த மாணவர்களில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானவர்கள் மற்றும் தெரிவாகாதவர்கள் என
அனைவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படுவதாகவும்
ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தலைமைத்துவ பயிற்சியானது, மாணவர்களின் சுதந்திர செயற்பாட்டைப் பாதிப்பதாகவும் பல்கலைக்கழகங்களை இராணுவமயமாக்கும் முயற்சியாகும் எனவும் அச்சங்கத்தின் செயலாளர்
ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பாடசாலைகள்
மற்றும் பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக
நிறுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.
ConversionConversion EmoticonEmoticon