தெரிவுக்குழுவிற்கு அதிகாரமுள்ளதா?, பிரதம நீதியரின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க?


இவர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கின்றதா? என்று உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வரக்கூடிய கண்டனத் தீர்மாங்களை விசாரிக்கும் அதிகாரம் அரசியல்யாப்பின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கும் நிலையில் பிரதம நீதியரசரை தெரிவிக்குழுவினால் விசாரிக்க முடியுமா என்றும் நீதியரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரத நீதியரசருக்கு  எதிரான குற்றப்பிரேரணை சட்டவிரோதமானது என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை  விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொண்டபோதே நீதியரசர்  காமினி அமரதுங்க மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இவை இவ்வாறிக்க, மனுக்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின்  கீழ் செயற்படும். நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளே உள்ள விடயங்களை கையாளும் அதிகாரங்கள் மாத்திரமே இருப்பதாகவும், நாடாளுமன்றத்துக்கு வெளியே அதனை செயற்படுத்தும் வகையில் அது ஒரு பொதுச் சட்டம் அல்ல நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த வழக்குகளை எதிர்த்து வாதாடிய சட்டமா அதிபர் இந்த வழக்கை விசாரணை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையும் இன்று  வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Previous
Next Post »

More News