தற்போதைய காலப்பகுதியில்
பொதுமக்களின்
பாதுகாப்பை கருத்தில்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் அக்காலப்பகுதிகளில்
'முடிச்சு மாறிகள்' குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
டிசம்பர், நத்தார்
மற்றும் புத்தாண்டு பண்டிகைகளில் இடம்பெறும் அசம்பாவிதங்களை தவிர்த்துக்கொள்வதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேற்கொள்ளவிருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள்
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து பொலிஸ்
நிலையங்களிலும் விசேடமாக மேல் மாகாணத்தில் கண்காணிப்பு
நடவடிக்கைகள 3 பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த வகையில்,
இக்காலப்பகுதிகளில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் கொள்ளைச்சம்பவங்களுக்கு எதிராக சட்ட
நடிவக்கை எடுக்கப்படும்.
கடந்த முறை
புதுவருட பிறப்பு மற்றும் நத்தார்
பண்டிகை காலங்களில் வாகன திருட்டு, வர்த்தக
மோசடி, சட்டவிரோத மது விற்பனை, பணம்
பறிப்பு, விபசாரம் போன்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளமை
தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதுதாக பொலிஸ் தலைமையகம் மேலும்
தெரிவித்துள்ளது.
போக்குவரத்து
விதிகளை மீறும் பாதசாரிகளுக்கு எதிராக
கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் 'மது அருந்திவிட்டு' வாகனங்களை
செலுத்துபவர்கள் போக்குவரத்து சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவர்.
இந்த சந்தர்ப்பங்களில்
8-10 வரையான விபத்துகள் நாள்தோறும் இடம்பெறுகின்றன. இக்காலங்களில் பெருந்தொகையான மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்காக
நகர்புறங்களுக்கு வருகை தருகின்றனர். ஆகையால்
உயிரிழப்பு வீதத்தை குறைப்பதற்காக இவ்வாறான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன'
'முடிச்சு
மாறிகளை' கைது செய்வதற்காக மேலதிக
பொலிஸார் சிவில் உடையில் பணிக்கு
அமர்த்தப்பட்டுள்ளதாகவும் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்படாத
வாகன சாரதிகளுக்க எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ConversionConversion EmoticonEmoticon