விண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் - சுகாதார அமைச்சு



ஆகாயத்திலிருந்து விழுகின்ற மர்மப் பொருட்களைக் காணுமிடத்து அவற்றை தொட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அமைச்சு, அவ்வாறான மர்மப் பொருட்களை காணுமிடத்து பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்துக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

ஆகாயத்திலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும் என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆகாயத்திலிருந்து விழும் மர்மப் பொருட்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தேசிய வானியல் ஆய்வாளரான பேராசிரியர் சந்திரா விக்கிரமதுங்கவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பில் தகவலறிந்தவர்கள், பொரளை மருத்துவ பரிசோதனை நிலைய தொலைபேசிய இலக்கமான 011 – 2693532 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது.

குறிப்பு : தற்போது நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் கண்களுக்கு இரவு வேளைகளில் தென்படும் பிரகாசமான ஒளிர்வு வியாழன் கிரகத்தினுடையது என்று ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் சிராஜ் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் கடந்த சில தினங்களாக வித்தியாசமான பிரகாச ஒளிர்வை அவதானித்து வருகின்றார்கள். இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்துள்ளார் .
Previous
Next Post »

More News