21.12.2012 இன்று
உலகம் உலகம் அழிந்து
விடும்... தற்போது எங்கு பார்த்தாலும்
இதே பேச்சாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
காலண்டரால்
வந்தது தான் இந்த பரபரப்பு..
இந்த விபரீத கற்பனையை விஞ்ஞானிகள்,
நிபுணர்கள் 100 சதவீதம் மறுத்துள்ளனர். மெக்சிகோவை
பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினர், முதல்
மனித நாகரீக இனத்தினர் என்றால்
அது மிகையாகாது. அவர்கள் வானியல் சாஸ்திரம்,
ஜோதிடத்தில் மிகச்சிறந்து விளங்கியதாக கூறப்படுகிறது. அந்த காலத்திலேயே அவர்கள்,
அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளை
கொண்டதாக இருந்தது.
மேலும் இவை தொடர்பாக
ஆராயும் போது……
இதனை நோக்கும்
போது, இந்த காலாண்டர் கி.மு. 3114ல்
தயாரிக்கப்பட்டுள்ளது. காலண்டர் அமலுக்கு வந்த பின்னர், டிசம்பர்
21ம் திகதி அது முடிவடைகிறது.
இதை வைத்து கொண்டு கடந்த
சில ஆண்டுகளாகவே இந்த நாளில் உலகம்
அழியப்போவதாக, ஆளாளுக்கு ஒரு கதையை கூறி
மக்களை பீதிக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
சில மோசடிக் கும்பல்கள் இதை
வைத்து மக்களை பயமுறுத்தி பணம்
சம்பாதிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் இதுகுறித்து
தீவிரமாக ஆராய்ந்தது. இதேபோல், மாயன் காலண்டர் நிபுணர்கள்
மற்றும் அமெரிக்க நிபுணர்களும் ஆராய்ந்தனர். அவர்களின் ஆய்வு முடிவில் உலகம்
அழிய 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய முடிவுக்கு 3 தரப்பிலும் இருந்தும் வெளியிடப்பட்டுள்ள காரணங்கள்:
மாயன் காலண்டர் என்பது 1,44,000 நாட்களை கொண்டது. அதன்பின்னர்,
அந்த காலண்டர் மறுபடியும் சுழற்சிக்கு உள்ளாகும். இணையதளங்களில் உலா வரும் செய்திகளை
போல உலகம் அழிய 100 சதவீதம்
வாய்ப்பில்லை. மாறாக மனித இனம்,
மாயன் இனத்தினரின் கூற்றுப்படி, புதிய சகாப்தத்தில் அடியெடுத்து
வைக்கப்போகிறது. அதாவது புதிய நாட்காட்டி
சுற்றில் மனித இனம் அடியெடுத்து
வைக்கப்போகிறது.
இது கொண்டாடப்பட வேண்டிய விஷயமே அன்றி,
பயப்பட வேண்டிய நாள் அல்ல.
மாயன் இனத்தினரின் பூர்வீகமான மெக்சிகோவின் யூகாடன் நகரில் சமீபத்தில்
நடந்த, மாயன் காலண்டர் தொடர்பான
கருத்தரங்கில் அகழ்வாராய்ச்சி துறை நிபுணர் தாமஸ்
காலரெட்டா, விண்வெளி ஆய்வாளர் ஆர்காடியோ பொவேடா ரிகால்டே, பேராசிரியர்
மார்டே டிரெஜோ உள்ளிட்டோர் மாயன்
காலண்டர் தொடர்பான அனைத்து தவறான கருத்துக்களுக்கும்
பதில் அளித்தனர். இந்த கருத்தரங்கின் முடிவில்
வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பூமியின் இறுதி நாளை மாயன்
காலண்டர் குறிப்பிடவில்லை. ஆனால், என்றாவது உலகம்
ஒரு நாள் அழியக்கூடும். அறிவியலால்
அனைத்தையும் கணித்துவிட முடியாது’ என்று கூறினர்.
நாசா விஞ்ஞானிகள்: சாத்தியமே இல்லை:
உலகம் அழிவதற்கான காரணிகளாக எரிமலை சீற்றம், தீவிரவாதிகள்
தாக்குதல், விண்வெளிப்பாறை தாக்குதல், சூரிய காந்தப்புயல், கோள்கள்
மோதல் ஆகியவை கூறப்படுகிறது.
இதற்கு
நாசா விஞ்ஞானிகள் அளித்துள்ள தெளிவான விளக்கம் வருமாறு:
* கோள்கள்
மோதலுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. சூரிய குடும்பத்தில் வளர்ச்சிக்
குன்றிய சில கோள்கள் இருப்பது
உண்மைதான். ஆனால், அவை வெகு
தொலைவில் உள்ளன. பூமியை நோக்கி
வருவதுபோன்று கூட அதன் பாதை
இல்லை. இதனால் கோள்கள் மோதலுக்கு
இப்போதைக்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை.
* பூமியை
நோக்கி மோத வருவது அல்லது
அதற்கான வாய்ப்புகள் இருக்கும் விண்வெளிப் பாறைகள் குறித்து பல
ஆண்டுகளாக நாசா ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.
எந்த விண்வெளிப்பாறையும் இரண்டு நாளில் பூமிக்கு
அருகில் வர வாய்ப்பே இல்லை.
* சூரிய
காந்தப்புயலால் பூமிக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட
வாய்ப்பில்லை. சூரிய காந்தப்புயல் என்பது
வழக்கமான இடைவெளியில் நடந்து வருவதுதான். ஒவ்வொரு
11 ஆண்டுக்கு ஒருமுறை அது அதிகபட்சமாக
இருக்கும். இதுபோன்ற சமயங்களில் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களுக்கு
மட்டுமே பாதிப்பு ஏற்படும். அதேபோல், பூமியில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால், மனித இனத்துக்கு
பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
மேலும், 2012ல் சூரிய காந்தப்புயலுக்கு
வாய்ப்பு இல்லை.
* தீவிரவாதிகள்
தாக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட
பகுதியில் மட்டும் வேண்டுமானால் நடக்கலாம்.
ஒட்டுமொத்த உலகத்தை அழிக்க வாய்ப்பில்லை.
எரிமலை வெடிப்பும் இதுபோன்றதே.
* இது தவிர துருவ மாற்றம்
ஏற்படலாம் என்றும் சிலர் பீதி
கிளப்புகின்றனர். துருவ மாற்றம் என்பது
சராசரியாக 4 லட்சம் ஆண்டுக்கு ஒரு
முறை நடக்க வாய்ப்புள்ளது. இதனாலும்,
மனித இனத்துக்கு எந்த பெரிய பாதிப்பும்
ஏற்படாது. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு
துருவ மாற்றத்துக்கும் வாய்ப்பில்லை.
இவ்வாறு
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்படி இல்லை, இல்லை
என்று விஞ்ஞானிகள் அடித்து கூறினாலும், அழியப்போகிறது,
அழியப்போகிறது என்று ஒவ்வொரு வினாடியும்
வதந்திகள் கிளப்பப்படுவதை தடுக்க முடியவில்லை.
ConversionConversion EmoticonEmoticon