தனது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்ற முதலமைச்சராக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர்
மாறவேண்டும் என்று கிழக்கு மாகாண
அமைச்சர் ஹாபீஸ் நஸீர் தெரிவித்துள்ளார்
கிழக்கு மாகாண சபையின் 2013 ஆம்
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்
முதலமைச்சர் செயலகத்துக்கான குழுநிலை விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை
இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்துள்ளார் .
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
தெரிவித்துள்ளதாவது
கிழக்கு
மாகாண முதலமைச்சரின் கீழ் ஏராளமான திணைக்களங்களும்
செயலகங்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இந்த வரவு செலவுத்
திட்டத்தில் அவற்றுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின்
கீழ் இவ்வளவு திணைக்களங்களும் செயலகங்களும்
இருப்பதாக ஒரு தோற்றப்பாடு இருப்பதென்னவோ
உண்மைதான். ஆனால், இவை அனைத்தும்
முதலமைச்சரின் கீழ்தான் செயற்படுகின்றனவா என்கிற கேள்வி எனக்குள்
இருக்கிறது.
முதலமைச்சர்
எல்லா விடயங்கள் குறித்தும் ஆளுநரிடமே கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை அவதானிக்கும்போது மிகவும்
கவலையாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையிருந்தால்
இந்த மாகாண சபையை எவ்வாறு
முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வது என்பது
கேள்விக் குறியாகவுள்ளது.
கிழக்கு
மாகாண முதலமைச்சர் இங்குள்ள மூவின மக்களுக்கும் நியாயமான
முறையில் சேவைகளை வழங்க வேண்டும்
என்கிற எண்ணம் கொண்டவர். ஆனால்,
அவருடைய இரண்டு கைகளும் கட்டப்பட்டுள்ள
நிலையில் உள்ளார்.
மேற்படி
வரவு செலவுத் திட்டத்திலுள்ள 1.8 பில்லியன்
ரூபா மூலதனச் செலவிலே முதலமைச்சரின்
கீழ் வருகின்ற திணைக்களங்களுக்கும், செயலகங்களுக்குமான தொகைகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், கிழக்கு மாகாண சபையின்
ஏனைய அமைச்சுகள் அனைத்துக்கும் வெறும் 600 மில்லியன் ரூபாதான் வழங்கப்படுகிறது.
அவ்வாறு
ஒதுக்கப்படுகின்ற தொகைகளிலும் பல மில்லியன் ரூபா
வெட்டியெடுக்கப்படுகின்ற போது, இந்த மாகாண
சபையில் எந்தவொரு வேலைத் திட்டத்தையும் முழுமையாகச்
செய்ய முடியாது.
கிழக்கு
மாகாணத்தின் பிரதம செயலாளர் நியாயமாகவும்
நேர்மையாகவும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றார். அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். எனக்கோ எனது அமைச்சுக்கோ
இதுவரையில் பிரதம செயலாளர் எதையும்
செய்யவில்லையென்றாலும் அவரின் நேர்மைக்கு நன்றி
செலுத்துவது இந்த இடத்தில் பொருத்தமாகும்
என்றார்.
ConversionConversion EmoticonEmoticon