எந்த
அடையாளம் கண்டுபிடிக்க
முடியாத பறக்கும் பொருள் (Unidentified flying
object அல்லது UFO என்று பொதுவாக சுருக்கமாக
அழைக்கப்படும்) பிரசித்தியான ஏதேனும் வான்வெளி இயற்கை
விந்தை பற்றிய சொற்றொடர் ஆகும்.
அதன் காரணம் சுலபமாகவோ அல்லது
உடனடியாகவோ அறிந்திடா ததாகும்.
இது
தொடர்பாக, அமெரிக்க விமானப்
படை 1952ம் வருடம் இந்தச்
சொற்றொடரை முதன் முதலாகப் புனைந்து
கூறியது. அது தொடக்கத்தில் யு.எஃப் ஓக்களை நிபுணத்துவம்
மிக்க பலனாய்வாளர்கள் நுண்ணாய்வு நடத்தியும் அடையாளம் கண்டுணர முடியாத பொருள்கள்
என வரையறை செய்தது. யுஎஃப்ஒ
என்ற சொற்றொடரை அடிக்கடி பயன்படுத்தி இருந்தபோதும் பொதுப்படையாக அது அறிக்கை அனுப்பும்
ஆய்வாளர்களுக்கு பார்வையில் பட்டும் அடையாளம் கண்டுணர
முடியாமலே உள்ளது.
இவை
தொடக்கத்தில் புராண இலக்கியம்
மற்றும் மக்கள் மரபு ஆராய்ச்சிகள்
அந்த இயற்கை விந்தையைச் சுற்றிச்
சுழன்று வலம் வரத்தொடங்கின. பின்னர்
புலனாய்வாளர்கள் அடை யாளம் கண்டுணராத
வான்வெளி விந்தை என்பதைப் பயன்படுத்த
தொடங்கினர். இதுவரை மேற்கொண்டுள்ள யுஎஃப்ஒ
ஆய்வுகளில் ஒரு சில கட்டு
கதைகள் என அறியப்படுகின்றன. ஆனால்
பெரும்பான்மையான உற்று நோக்காய்வுகள் மெய்யான
வழிவழி கண்டு வந்த பொருள்கள்
பற்றி அமைந்துள்ளன.
பெரும்பாலும்
விமான ஊர்திகள், ஆகாய பலூன்கள், அல்லது
வான்வெளி பொருள்கள் அதா வது எரிமீன்கள்
மற்றும் பிரகாசமான கிரகங்கள் இடம்பெறுவதுடன் அவைகள் தவறுதலாக உற்று
நோக் கர்களால் அடையாளம் காணப்பட்டு முள்ளன. பார்வையில் கண்டதை
அறியப்படுத்துவதில் ஒரு சிறிய சதவீதமே
பறக்கும் பொருள்களாக அடையாளம் காண முடியாமல் கண்டிப்பான
அர்த்தத்துடன் வகைப் படுத்தப்பட்டுள்ளன. ஷென்
குயோ (1031-1095) பாடல் திறன்படைத்த சீன
அரசாங்க மேதை யும் அலுவலரும்
ஆவார்.
அவர்
வளமார் பல்கலைக்கழக வல்லுநரும் கூட. சிறந்த கண்டுபிடிப்பாளராகவும்
திகழ்ந்த அவர் மாமேதையாக விளங்
கினார். 1088ல் அவர் ஒரு
தெளிவான கட்டுரைப்பகுதி எழுதினார். அதன் பெயர் 'ட்ரீம்
பூல்' முக்கியமாக அடையாளம் அறிய முடியாத பறக்கும்
பொருளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 11ஆம் நூற்றாண்டில்
நேரில் கண்ட சாட்சியாளர்களின் சான்றுரைகளை
அவர் பதிவு செய்துள்ளார். மக்களின்
கூற்றுக்களை பதிவாக்கி தனது ஏட்டில் சேர்த்துள்ளார்.
அதன்படி ஒரு பறக்கும் பொருள்
கதவுகள் திறக்கப்பட உள்ளிருந்த முத்துப் போன்ற இடத்தில் இருந்து
கண்கூசத் தக்க ஒளி பாய்ந்து
வருவதைக் கண்டதாகவும் அதன் நிழல்கள் மரங்களில்
விழ ஆரம்பித்து மைல்களுக்கும் மேலாக நீண்டிருந்தது என்றும்
அந்த சாதனம் பேராற்றல் கொண்ட
வேகத்தில் தரையில் இருந்து மேல்
உந்திக் கிளம்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
1878ம் ஆண்டு
ஜனவரி 25 ஆம் திகதி தி
டெனிஸன் டெய்லி நியூஸ் எழுதிய
செய்தியில் உள்ளூர் விவசாயி ஒருவரின்
பேட்டியைக் குறிப்பிட்டிருந்தது. அவர் ஒரு பெரிய
கரிய வட்ட வடிவ பறக்கும்
பொருளைக் கண்டதாகவும் அது பலூன் வடிவை
ஒத்திருந்ததாகவும் மேலும் ஆச்சரியமான வேகத்தில்
பறந்து சென்றதாகவும் விவசாயி சொன்னார். அது
ஒரு தட்டுவடிவத்தில் தோன்றியி ருந்ததென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதன்
முதல் 'சோஸர்' என்ற சொல்
பிரயோகத்திற்கு வந்ததாகவும் அதுவும் யுஎஃப்ஓவுடன் இணைந்திருந்ததாகவும்
தகவல் அந்த பத்திரிகை வெளியிட்டது.
1904 பெப்ரவரி 28 ஆம்
திகதி யு. எஸ். எஸ்.
விநியோக கப்பல் ஸான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து 300 மைல்கள் மேற்குமுகமாக இருந்தபோது
மூன்று மாலுமிகள் கண்பார்வையில் பறக்கும் பொருளைக் கண்டதாக அறிக்கை வெளிவந்தது.
அவ்வறிக் கையை வெளியிட்டவர் லெப்
பிரான்க் ஸ்கோபீல்டு ஆவார். அவர் பின்னாளில்
பசிபிக் யுத்த கப்பல் படையின்
கமாண்டர் இன் சீப் ஆனவாராவார்.
அவரது அறிக்கையின் படி, மூன்று பிரகாசமான
முட்டை வடிவ மற்றும் வட்டவடிவ
பொருள்கள் ஏறுபடி அணிவரிசையின் பால்
முகிலடுக் குகளின் கீழ் தென்பட்டதாகவும்,
அவைகளின் போக்கைப் பின்னர் மாற்றிக் கொண்டதாகவும்,
முகி லடுக்குகளில் இருந்து உந்திக் கிளம்பியதாகவும்,
இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் பூமியிலிருந்து
நேரடியாக விட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அம்மூன்று
பொருள்களில் மிகப் பெரியது ஆறு
சூரியன்களை தோற்றத்தில் நிகர்த்தி இருந்ததாகவும் மேலும் குறிப்பிட் டுள்ளார்.
1916 மற்றும் 1926 நார்காப் அட்டவணையில் இடம்பெற்ற யுஎஃப்ஒவின் பார்வையில் கண்டவை அவைகளை சொன்னவர்கள்
மூன்று முதிர்ந்த விமான ஓட்டிகள் ஆவர்.
அதில் யுகே விமானி ஒருவர்
ராக்போர்டு. அருகே ஒரு விளக்குகள்
வரிசையையே கண்டதாகத் தகவல் வெளியிட்டார். அவ்வரிசை
ரயில் பெட்டியில் ஜன்னலோரம் கண்ட விளக்குகள் போன்று
இருந்தன என்றும் ஒப்பிட்டுள்ளார். அவைகள்
தோன்றிய வேகத்தில் உடனேயே மறைந்ததாகவும் சொன்னார்.
1926 செப்டெம்பர் பிற்பகுதியில்
ஒரு தபால் விமான ஓட்டி
திடுமென நிவாடாவில் தனது விமானத்தை வலுக்கட்டாயமாக
தரையிறக்க நேர்ந்தது என்றும் அது ஒரு
பெரிய இறக்கையற்ற உருளை வடிவப் பொருளால்
ஆகியிருந்தது என்றும் கூறியுள்ளார். 1926 ஆகஸ்ட்
5 ஆம் திகதி திபெத் பிரதேசங்களின்
கோனோர் பகுதியில் உள்ள ஹம்போல்ட் மலைகளில்
பயணித்துக் கொண்டிருக்கையில், நிக்கோலஸ் ரோரிச் என்பார் வெளியிட்டதகவல்,
அவரது பயணக் குழு உறுப்பினர்கள்
விநோதமான பொருளைக் கண்டனர். ஏதோ ஒரு பொருள்
பெரியது பிரகாசமானது சூரியன்போல் பிரதிபலித்தது. அது முட்டை போல்
நீள் உருண்டையாக இருந்தது. பெருவேகத்துடன் சென்றது. அவர்களது முகாமைக் கடந்தும் சென்றது.
தனது
போக்கை தெற்கிலிருந்து தென்மேற்காக மாற்றிக்கொண்டது. நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்கையில்
அது பரந்த நீல வானத்தில்
மறைந்து விட்டது. அதற்குள் நாங்கள் சாவ காசமாக
எங்கள் தொலை நோக்காடிகளை எடுத்து
தெளிவாக உற்று நோக்கி னோம்.
ஒரு நீள் உருண்டை வடிவப்பொருள்
அதன் ஒரு பக்கம் சூரியன்
போல் தகதகவென மின்னியது. இவ்வாறெல்லாம்
அவர் தகவல்கள் வெளியிட்டார். அவரது மற்றொரு விள
க்கம் வருமாறு,
ஒரு
மிளிரும் பொருள் வடக் கிலிருந்து
தெற்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது.
எங்கள் கையில் தொலைநோக்காடிகள் எடுத்து
வைத்திருந்தோம். அது ஒரு மிகப்
பெரும் விண்வெளிப் பொருள். ஒரு பக்கம்
கதிரவன் போல் ஒளிச்சுடர் உமிழ்ந்த
வண்ணம் இருந்தது. முட்டை போல் நீள்
உருண்டை வடிவம் பெற்றிருந்தது. பின்னர்
வேறு திசையில் எப்படியோ திரும்பியது. தென்மேற்கு முகமாக மறைந்து சென்றது.
பசிபிக்
மற்றும் ஐரோப்பிய அரங்குகளில் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில்
சண்டை விமானங்கள் (உலோக உருளைகள், ஒளிப்பந்துகள்,
இன்ன பிற வடிவங்கள் வான்கலங்களை
பின்பற்றி பறந்தன. அவை நேச
மற்றும் அச்சு நாடுகள் சார்ந்த
விமானிகளை அவ்வப்பொழுது நிழல்படம் எடுத்தன. 1942 ஆம் வருடம் பெப்ரவரி
25 ஆம் திகதி படை நுண்ணோக்காளர்கள்
அறிவித்தபடி, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வான்கலம் அதாவது
கண்ணாலும் சரி மற்றும் ராடராலும்
சரி காண முடியாதபடி கலிபோர்னியோ
பகுதியில் லாஸ் ஏன்ஜெல்ஸ் மீது
பறந்து வந்ததாக தகவல்கள் வெளியாயின.
நன்றி தினகரன்
ConversionConversion EmoticonEmoticon