இலங்கையிருந்து
சட்டவிரோதமான படகுகள்
மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை பப்புவா நியூகினியின் மனூஸ்
தீவுகளுக்கு அனுப்புவது தொடர்பான சட்டமூலத்துக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த
சட்டவிரோதமான முறையில்
படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்து கிறிஸ்மஸ்
தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் களை நாவுறு
மற்றும் பப்புவா நியூகினி தீவுகளுக்கு
அனுப்பும் நடவடிக்கையை அவுஸ்திரேலியா ஆரம்பித்துள்ளது.
இவர்கள்
நாவுறு தீவுக்கு சுமார் 200 பேர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்
நிலையில், பப்புவா நியூ கினியின்
மனூஸ் தீவுக்கு ஆட்களை அனுப்புவது தொடர்பில்
சட்டமூலமொன்றை அவுஸ்திரே லியாவின் குடிவரவு, குடியகல்வு அமைச்சர் கிறிஸ்பொவன் முன்வைத்திருந்தார். இச் சட்டமூலத்துக்கு அவுஸ்திரேலிய
பாராளு மன்றம் நேற்று அனுமதி
வழங்கியுள்ளது.
இது
போல் இன்னும் ஒரு வார காலத்துக்குள் பப்புவா
நியூ கினியின் மனூஸ் தீவுக்கு அனுப்பும்
நடவடிக்கை ஆரம்பிக்கப் படும் என அவுஸ்திரேலிய
அமைச்சர் பொவன் குறிப்பிட்டுள்ளார். மனூஸ்
தீவில் சுமார் 600 பேர் தங்கவைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக
அவர் தெரிவித்தார்.
இந்த
பப்புவா நியூகினிக்கு
அனுப்பப்படுபவர்களைத் தங்க வைப்பதற்கான அடிப்படை
வசதிகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும்,
ஒரு வாரத்துக்குள் முதல் தொகுதியினர் அங்கு
அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ConversionConversion EmoticonEmoticon