மனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை


தற்கால மக்களின் இயந்திரமாகிப் போன வாழ்க்கையில் 'மன அழுத்தம்' என்பது ஆபத்தான விடயமாக உருவாகி வருகிறது.

இதற்கு காரணங்களாக, ஓய்வின்மை, வேலைப்பளு, பணநெருக்கடி, வீடில்லாப் பிரச்சினை, காதல் தோல்வி, வேலைவாய்ப்பின்மை, சமூகப் புறக்கணிப்பு, மேலதிகாரியின் தொந்தரவுகள், ஆதரவற்ற வாழ்க்கை என்றெல்லாம் மன அழுத்தத்துக்கான காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த மன அழுத்தத்தை அலட்சியப்படுத்து வது ஆபத்தானது. மனதளவில் உருவா கும் பிரச்சினையானது, காலப்போக்கில் விஸ்வரூபமடைந்து இறுதியில் உடலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இவ்வாறான மனத்தைரியமற்றோரைப் பொறுத்த வரை மன அழுத்தமென்பது இறுதியில் தற்கொலையிலும் முடிந்துவிடும் பரிதாபம் ஏற்படுவதுண்டு. சீனாவில் மாத்திரம் ஆண்டு தோறும் இவ்விதம் சுமார் 250 பேர் தற்கொலை செய்து கொள்வதாக அறிக்கையொன்று கூறுகிறது. மன அழுத்தப் பிரச்சினையால் அவதியுறுவோர் உளநல ஆலோசனை களையும் தகுந்த மருத்துவ சிகிச்சையை யும், பெற்றுக் கொள்வது அவசியமென வலியுறுத்தப்படுகிறது.
Previous
Next Post »

More News