2012 ஆண்டிற்கான இரசாயனவியலுக் கான நோபல் விருது
இரு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்ப ட்டுள்ளது.
மனித செல்களில்
உள்ள புரதத்தின் மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்காக ரொபட்
லெப்கோவிட்ஸ் மற்றும் பிரையன் கோபில்கா
ஆகியோரே 2012 நோபல் விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டனர்.
பெயர்களை நோபல்
பரிசுக் குழு சுவீடனில் இருந்து
2012.10.10 இந்த அறிவிப்பை
வெளியிட்டது. இதன் மூலம் மேற்படி
இரு அமெரிக்க இரசாயன விஞ்ஞானிகளும் நோபல்
விருதுக்கான 1.2 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை
பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
வெளியில்
இருந்துவரும் சமிக்ஞைகளு க்கு புரத சக்தி
கொண்ட செல்கள் எவ்வாறு பதில்
அளிக்கின்றன என்பது குறித்து இந்த
இரு விஞ்ஞானிகளும் ஆய்வு நடத்தியுள்ளனர்.
மனிதனுக்கு புரத
சக்தி குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு
இவர்களது ஆராய்ச்சி அடிப்படையாக அமைந்திருப்பதால், இவர்கள் நோபல் பரிசு
பெற தேர்வு செய்யப்பட்டதாக நோபல்
பரிசுக் குழுவின் செயலாளர் ஸ்டெபார்ன் நோர்மன் விளக்கமளித்துள்ளார்.
இந்த பரிசு அறிவிப்பு தனக்கு
ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாக லெப் கோவிட்ஸ் தெரிவித்தார்.
இவர் வடக்கு கரோலினா மாகாணத்தில்
உள்ள ஹெவாட் ஹக்ஸ் மருத்துவ
பல்கலைக்கழகம் மற்றும் டியூக் பல்கலைக்கழகத்தில்
பணி புரிகிறார். கோபில்கா ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில்
பணியாற்றி வருகிறார்.
ConversionConversion EmoticonEmoticon