5 ஆண்டுகளில்
இந்தியாவில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்
சிங் உறுதி அளித்துள்ளார்.
இது
தொடர்பாக, புது டில்லியில்
இந்திய தொழில் துறை கூட்டமைப்பு
ஏற்பாடு செய்திருந்த எரிசக்தித் துறையில் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்த சர்வதேச கருத்தரங்கை
துவக்கி வைத்துப் பேசிய பிரதமர், இந்தியாவில்
உள்ள 6 இலட்சம் கிராமங்களுக்கும மின்சாரம்
வழங்க வேண்டும் என்பதே மத்திய அரசின்
முதல் இலக்கு.
அண்மைய
காலத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட
கிராமங்களுக்க மின்சார இணைப்பு வழங்கப்
பட்டுள்ளது. இன்னும் சில கிராமங்கள்
மட்டுமே மின் இணைப்பு கிடைக்காமல்
உள்ளன.
மேலும்,
ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது என்று கூறினார் உலகில்
சுமார் 1.3 பில்லியன் மக்கள் மின்சாரம் கிடைக்கப்
பெறாமல் உள்ளனர் என்றும பிரதமர்
தெரிவித்தார்.
ConversionConversion EmoticonEmoticon