ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்



இ. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ரொபர்ட் வதேரா மற்றும் டி.எல்.எப். நிறுவனத்திற்கு எதிராக அர்விந்த் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனக் கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இது பற்றி பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரித் அல்வி, அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதில் புதிதாக எதுவும் இல்லை. அவர் விளம்பரத்தை விரும்புகிறார். சுய விளம்பரத்திற்காகவே கெஜ்ரிவால் இவ்வாறு செய்துள்ளார். அவர் அளித்த ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவையா, இல்லையா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்.

அவ்வாறனவை உண்மை என நான் நம்பமாட்டேன். ஒருவேளை இது ஒரு பிரச்சினையாக இருந்தால், அரியானா மாநில அரசு இதற்கு பதிலளிக்கும். அரியானா அரசிடம் கெஜ்ரிவால் வெள்ளை அறிக்கை கோரியிருக்கிறார். கோரிக்கைகளை இவ்வாறு ஊடகங்கள் வாயிலாக விடுக்கக்கூடாதுஎன்றார். மேலும், இது போன்ற குற்றச்சாட்டுகள் சிரிப்பை வரவழைக்கக் கூடியவை. அவர்களே குற்றம் சாட்டினார்கள்.

அதற்குரிய ஆவணங்களைக் காட்டினார்கள். தண்டனையையும் கூறுகிறார்கள். நீங்கள் உயர் நீதிமன்ற ஆவணங்களை பார்த்திருக்கிaர்களா? இந்த தீர்ப்பு எப்போது நிறைவேற்றப்பட்டது? சட்டம் மீறப்பட்டிருந்தால் அரசு தன் கடமையை செய்யும். ஆனால் இவ்வாறு ஊடகங்கள் முன்னால் நிற்பது சரியான வழியில்லை. நீதிமன்றங்களை அணுகுங்கள்எனவும் அல்வி கூறினார்.

 மேலும் பேசிய அல்வி, எந்த அடிப்படையும் இல்லாமல் இவ்வாறு குற்றம் சாட்டுவதை நான் கண்டிக்கிறேன். இதனை மிகப் பெரிய சதியாக நான் கருதுகிறேன். நாங்கள் எப்போதும் ஊழலுக்கு எதிரானவர்கள். எந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டாலும், நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் கெஜ்ரிவால் அளித்த ஆவணங்களைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாமல் நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்..
Previous
Next Post »

More News