இசை, நாடகம், நடனம் மற்றும்
பல்வேறு கலைத்துறைகளில் பங்காற்றி சாதனை படைத்த கலைஞர்களுக்கு
2011ம் ஆண்டிற்கான விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி
கெளரவித்தார்.
கலைஞர்களுக்கு
2011ம் ஆண்டிற்கான விருது அறிவிக்கப்பட்டது. இதற்கான
விருது வழங்கும் நிகழ்ச்சி டில்லி ராஷ்ரபதி பவனில்
நடந்தது. இதில் பல்வேறு துறைகளில்
சிறந்து விளங்கிய 47 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதில் புகழ்பெற்ற அஜ்மத் அலிகா, சந்தூர்
சிவக்குமார்சர்மா, புல்லாங்குழல் வித்வான் ஹரிபிரசாத் சவுராசியா, மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் உள்ளிட்டோர் முக்கிய கலைஞர்கள் ஆவர்.
இசை, நடனம், நாடகத்தில் சிறந்து
விளங்கிய 11 பேருக்கும், மற்ற துறைகளில் சிறந்து
விளங்கிய 36 பேருக்கும் என 47 பேருக்கு விருதுகளை
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இவ்விழாவில் முக்கியமாக 91 வயதான கேரளாவைச் சேர்ந்த
இசைக்கலைஞர் திரிப்பிக்குளம் அச்சுதா மராருக்கும், 48 வயதான
பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நட்ராஜுக்கும்
வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கலைஞர்கள்
கலந்து கொண்டு விருது பெற்றனர்.
சங்கீத
நாடக அகாடமி விருகை மிருதங்க
வித்வான், உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமனுக்கு ஜனாதிபதி வழங்கி கெளரவித்தார். தமிழகத்தின்
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் பத்மஸ்ரீ,
பத்மபூஷண், பத்மவிபூஷண், மாநில இசைக்கலைஞர் விருது
என பல்வேறு விருதுகளை வாங்கி
குவித்தவர் ஆவார். மிருதங்க வித்தைகளில்
பல புதிய யுக்திகளை புகுத்தியவர்
இவர். அருபதி நடேசன், கும்பகோணம்
ரங்கு, பாலக்கோடு மணி ஐயர் ஆகியோரிடத்தில்
இசை பயின்றவர்.
ConversionConversion EmoticonEmoticon