தீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா?

மனிதனின் தற்கொலைகள் பல வழிகளில் உலகநாடுகளில் நாளாந்தம் பெருமளவினரால் மேற் கொள்ளப்படுகின்றன. சிலர் தூக்கிட்டும் சிலர் நஞ்சருந்தியும் சிலர் நாடி, நாளங்களை வெட்டி உடலில் உள்ள இரத்தம் அனை த்தையும் வெளியேற்றியும் வேறு சிலர் மிதமிஞ்சிய அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டும் இன்னும் சிலர் கிணற்றில் அல்லது ஆற்றில் விழுந்தும் தற்கொலை செய்கிறார்கள்.


எனவே தான், இந்தியாவில் தற் கொலைகள் நாளாந்தம் அதிகரி த்த வண்ணம் இருக்கின்றன. அது வும் தமிழ் நாட்டிலேயே ஆகக் கூடுதலான தற்கெலை சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றன. இப் போது பெரும்பாலானோர் தீக்குளி த்து தற்கொலை செய்கிறார்கள்.

சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத நிலையில் உள்ளவர்கள் இறந்த பின்னராவது தங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும், தங்களின் படங்கள் அடங்கிய பதாகைகள் ஊரெங்கிலும் போடப்படும், குடும் பத்தினருக்கும் நஷ்டஈடு இலட்சக் கணக்கில் வழங்கப்படும் என்ற நப் பாசையிலும் பல தமிழ் நாட்டு இளைஞர்கள் தீக்குளித்து தற்கொலை செய்கிறார்கள்.

பண்டைக்காலத்தில் தங்கள் கணவன்மார் இறந்தவுடன் இந்திய பெண்கள் தாங்கள் கற்புக்கரசிகள் என்பதை உலகிற்கு பறைசாற்றுவதற்காக உடன்கட்டை ஏறி, தீயில் எரிந்து கொண்டிருக்கும் கணவனின் உடலின் மீது விழுந்து தற்கொலை செய்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியினர் காலத்தில் உடன்கட்டை ஏறும் முறை சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது.

இதற்கு பலரும் இது எங்களுடைய மத ரீதியிலான பல தலைமுறைகளாக நிலவிய பண்பாட்டை சீர்குலைக்கும் செயற்பாடென்று கண்டனம் தெரிவித்த போதிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த தடையை கடுமையாக நடைமுறைப்படுத்தி உடன்கட்டை ஏறும் முறையை நிரந்தரமாக இல்லாமல் செய்தார்கள்.

சில பெண்கள் கணவனுடன் உடன்கட்டை ஏறி, தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு விரும்பாத போதிலும், சம்பிரதாயத்திற்கும் சமூக எதிர்ப்புக்கும் பயந்து உடன்கட்டை ஏறிய சம்பவங்கள் குறித்து உண்மைத் தகவல்களை தெரிந்து கொண்ட பின்னரே பிரிட்டிஷ் அரசாங்கம் இது விடயத்தில் நடவடிக்கை எடுத்தது. தீக்குளிக்கும் பழக்கத்தை உலகிற்கு உடன்கட்டை ஏறும் பண்டைய இந்திய நடைமுறைக்கு பின்னர் வியட்னாமிலேயே தீக்குளித்து தற்கொலை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

1970ம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பகட்டத்தில் அமெரிக்கா வியட்னாமில் ஒரு பெரும் யுத்தத்தில் இறங்கியிருந்த காலத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் இந்த தவறான போக்கை கண்டிக்கும் முகமாக அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போராடிய வியட்கொங் என்ற விடுதலைப்படையின் ஆதரவாளர்களே இவ்விதம் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை அமெரிக்க இராணுவத்திற்கு வெளியிட்டார்கள்.

இந்தியாவில் தீக்குளிக்கும் மரணங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களும், பத்திரிகைகளுமே பிரதான காரணிகளாகும். சினிமாவிலும் தீக்குளிப்பு நிகழ்வுகள் காண்பிக்கப்படுவதுடன் பத்திரிகைகளும் இவை பற்றி அதிகமாக எழுதி தீக்குளிப்பவர்களை தேசிய வீரர்களாக அங்கீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதும் இந்த தீக்குளிப்பு தற்கொலை மரணங்களுக்கு பிரதான காரணமாகும்.
Previous
Next Post »

More News