தாவரவுண்ணிகளுக்கு அசுர பலம்

உலகில் பலமுள்ள மிருகங்களையும் களைப்பின்றி நீண்ட நேரம் கடினமாக இயங்கக் கூடிய மிருகங்களையும் எடுத்து நோக்குங்கள்....

குதிரை தனது முதுகில் இருவரைச் சுமந்தபடி மணிக் கணக்கில் சளைக்காமல் ஓடக் கூடியது. மாடுகளை வயலில் இறக்கி விட்டால் நாள் முழுக்க உழவு வேலையில் ஈடுபடக் கூடியன; விடிய விடிய சூடு மிதிக்கக் கூடியன; பகல் முழுக்க வண்டி இழுக்கக் கூடியன.

யானையும் அவ்வாறு தான்... பெரும் மரங்களைத் தூக்கிச் செல்லும் கடின வேலையை பகல் முழுக்க களைப்பின்றிச் செய்கின்றது. சிங்கமும் புலியும் கூட பல முள்ள மிருகங்களென நீங்கள் கூறலாம்.

உலகில் வேகமாக ஓடும் மிருகம் சிறுத்தையென்பது உண்மை தான். ஆனால் சிறிது நேரத்துக்கு மட்டுமே அது வேக மாக ஓடக் கூடியது. யானை, குதிரை, மாடு போன்று தொடர்ச்சியாக களைப்பின்றி இய ங்க புலி, சிங்கம் போன்றவற்றால் முடிவதில்லை.

தாவரவுண்ணிகள் எப்போதும் பலம் வாய்ந்தவையென்பது தான் இதற்கான கார ணம். முதல் உற்பத்தியாக்கிகளான தாவரங்களிலிருந்து நேரடியாக சக்தியைப் பெறுவதால் தான் இத்தனை பலம்.
Previous
Next Post »

More News