ஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்கான ஒப்பந்தம்


ரஷ்யாவிடமிருந்து 4.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு ஈராக் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள் ளது.

இரு நாட்டு தலைவர்களும் மொஸ்கோ நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

இதில் தாக்குதல் ஹெலிகொப்டர்கள், மிக் 29 ரக ஜெட் விமானங்கள், கனரக ஆயுதங்கள் தாங்கிய வாகனங்களையும் ஈராக், ரஷ்யாவிடமிருந்து வாங்கவுள்ளது.

சதாம் ஹுசைன் அரசில் ரஷ்யாவின் பிரதான ஆயுதக் கொள்வனவு நாடாக இருந்த ஈராக், அமெரிக்க தலையீட்டின் பின் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. எனினும் வெளிநாட்டு படைகள் ஈராக்கில் இருந்து முழுமையாக வெளியேறிய நிலையில் அந்நாட்டு அரசு தமது ஆயுத சக்தியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது
Previous
Next Post »

More News