ஐ.நா. பொதுச் சபை
கூட்டத்தை பார்வையிட இந்திய பாராளுமன்ற குழு
பாரதீய ஜனதா தலைவர் அத்வானி
தலைமையில் அமெரிக்கா சென்றுள்ளது. இந்நிலையில், நியூஜெர்சி பாரதீய ஜனதா கட்சி
ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அத்வானி
பேசினார்.
எனவே
தான் வாக்குரிமை குறித்து அவர் கூறியதாவது, வெளிநாட்டு
வாழ் இந்தியர்கள் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்கவே விரும்புகிறார்கள். அதற்கான முயற்சியையும் அவர்கள்
மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இந்தியர்களும் மற்றும்
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும்
இந்தியர்களும் வாக்குரிமை பெறவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
இது
ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.
இந்திய மற்றும் வெளிநாட்டு சட்டங்களில்
மாற்றங்கள் இருக்கிறபோது மட்டுமே இதை நாம்
கொண்டு வர முடியும். இந்தியாவில்
தேர்தல் கமிஷன் தன்னாட்சியுடனும் இராணுவம்
அரசியல் அமைப்பு சட்டப்படியும் செயல்படுவதனால்
அங்கு ஜனநாயகம் தழைத் தோங்கியுள்ளது.
ConversionConversion EmoticonEmoticon