விடியுமுன்னே விரைந்து வா!



பெட்டைக் கோழிகூவி, பொழுது! விடியாத பொழுது,

நெட்டைச் சேவல்நெடு நேரமாய்க் கூவிய பொழுது,
பொல பொலவென விடிந்தது பொழுது!


கீழ் வானத்துக் கிரணங்கள்,

மெல்ல மெல்ல மேலெழ,

பட்சியினங்களும் பண்ணிசை பாடிட,

வண்டினங்கள் வட்டமிடும் மலர்களும்,

வகை வகையாய் மணம் வீசிட,

காலை இளந்தென்றலும் தாலாட்டிட,

சாரி சாரியாய் சனங்களெல்லாம,

சந்து பொந்துகளிலிருந்து தெருவெங்கணும்,

ஊர்ந்து சென்றிட.... அங்கே.....!

ஒரு நாளில் ஆரம்பம்!’ தொடங்கிற்று!

கடிகார முட்களின் கால நகர்வில்,

வந்த அந்த அந்தியில்....

ஆதவனின் மறைவை யடுத்து...

காரிருள் கவியும் கங்குலில்,

காரிகையின் கனவினில் காளையும்

காளையின் கனவுகளில் காரிகையும்

இன்ப தரிசனம்காண்கின்ற வேளையில்...

இனிய நிலாவான் வெளியில்....

தனிமையிலே உலா வருகையில்...

அந்தஆற்று வாய்க் கடலலைகள்

சங்கமிக்கும், ‘இராத்திரி சங்கீதம்!’

ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும்!

தாரகைகளின் கண்சிமிட்டலில்,

கடல் மீன்களெல்லாம்...

தண்ணீருக்குள்ஊர்வலம்போகும்!

வெறுமையாய்க் கிடக்கின்ற,

அந்தக் கடற்கரையில்.. அமர்ந்து..

ஆற அமரப் பேசி மகிழலாம்!

அன்பே! நீ வா!’ என்று அழைக்கின்றேன்!

ஆதலால், ‘என் அன்பே!’

அவசரமாய் வந்து விடு!

அடுத்த நாளும் வந்து விடும்!

அப்புறமாய்..

வெறுங்கனவுகளே தொடரும்..!

கிண்ணியா ..
Previous
Next Post »

More News