அரசாங்க
சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள் சேவை
நீடிப்புக் கோராமலே அறுபது வயதுவரை
தொடர்ச்சியாக சேவையாற்றுவதற்கான அனுமதியை பொதுச் சேவை ஆணைக்குழு
வழங்கியுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை அரச சேவைகள் ஆணைக்குழுவின்
செயலாளர் திருமதி டி. எம்.
எல். சி. சேனாரட்ன சகல
அமைச்சுக்கள், திணைக்களத் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அரசாங்க
சேவையில் 57 வயதை பூர்த்தி செய்த
அரச ஊழியர்கள் அறுபது வயதுவரை சேவையாற்றுவதற்கு
வருடாந்தம் விண்ணப்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்நடைமுறை தற்போது அரச சேவை
ஆணைக்குழுவினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அரச ஊழியர் ஒருவர்55 வயது
முதல் 60 வரையான காலப்பகுதிக்குள் சொந்த
விருப்பின் பேரில் ஓய்வு பெறலாம்.
இதற்காக மூன்று மாத முன்னறிவித்தலை
வழங்க வேண்டும்.
அரச ஊழியர் ஒருவரை 57 வயதுக்கு
பின்னர் அவரது சேவை நிலைமை
வினைத்திறனற்ற சேவை என்பனவ ற்றின்
பேரில் ஓய்வுபெற வைக்கவேண்டிய நிலைமை இருப்பின் ஆறு
மாத முன்னறிவித்தலுடன் நியமன அதிகாரி ஓய்வு
பெற வைக்க முடியும் இவ்வாறு
அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
ConversionConversion EmoticonEmoticon