கௌரவம் குறுங்கதை



தக தய்ய தய்ய தய்யா தய்யா... தக தய்ய தய்யா.. என்ற உயிரே பாட பாடல் துள்ளி குதித்தது பைவ் ஸ்டார் கராச்சில் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது.... உரிமையாளன் சரத் பாஸ் இல்லாவிடினும் அங்கு வேலை சட்டப்படி நடக்கும்... சரத் பாஸ் அந்தளவுக்கு எல்லா ஊழியர்களையும் கவனித்தான்.

கணேஸ் கார் ஒன்று வருது புதுசா இருக்கு... பாருடாஎன்றான் சிவராஜ்.

கார்ல இருந்து ஒருத்தர் இரங்குராறு மச்சான் கணேஸ் கார்ல இருந்து எரங்குறது அட என்னோட .எல்ல படிச்ச ரஞ்சன் அவன்தான்டா.... கணேஸ் என்னான்னு கேட்டுவேலைய செஞ்சிகுடு..... நம்ம பொடியன்டா... இத முடிச்சிட்டு வாறேன்

என்று சந்தோசத்தில் தனது வேலையை வேகமாய் சிவா செய்தான்

அங்கே போன கணேஸ்

என்ன சேர் பிரச்சினஎன கணேஸ் கேட்க

பாக்கிங் லயிட் வேக் பண்ணல பாருங்கஎன்றான் ரஞ்சன்

புது காரா சேர்’ ‘இயேஸ்...’

சேர் ஊருக்கு புதுசா’ ‘இயேஸ்...’

சேர் ஒங்க பேர் என்னா... அவன தெரியுமா சேர்என சிவாவை கணேஸ் காட்டினான்.

என்ட பெயர் ரஞ்சன்... அவர தெரியவே தெரியாது கண்டதில்ல...’ என்றதும் சிவா சொன்னது உண்மையென்பதும் ரஞ்சன் கெளரவம் காட்டுவதையும் புரிந்தது.

கார் திருத்தவேலை முடிந்து போனது.

சிவா ஓடிவந்தான்என்னடா சரியா... நா கதைக்கிறதுக்கு மொதல்ல... போய்ட்டான் கண்டா உடமாட்டான்சிவா கூற

சும்மா போடா நீ சொன்னது சரி... சாருக்கு பண திமிரு ஒன்னையும் தெரியாதாம்... இந்த ஊருமில்லையாம்... கையில காசு வந்த பிறகு மாறிட்டான்கணேஸ் கூற சிவா மனமுடைந்து போனான்.

இரண்டு வாரத்துக்கு பிறகு சிவா, அமலுடன் சைக்கிளில் போகும்போது காட்டு வழியில் கார் ஒன்று நின்றது. அதில் ரஞ்சன் இருப்பதும் கண்டான்... உடனே என்ன பிரச்சினை என சிவா கேட்டு காரை சரிப்படுத்தினான்.

அப்போ ரஞ்சன்சிவா... எப்படி இருக்க... டேங்ஸ் இந்தா காசு...’ என்றான்.

சேர் நீங்க பெரிய ஆளு காசுஇருக்கலாம் அதுக்காக பழச மறக்காதீங்க... பழைய நட்புக்கு செய்த உதவி இது காசு வேணாம்... பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் ஆனா பழச மறந்து போலி கெளரவம் காட்டாதீங்க...’ என சிவா கூறி செல்ல காசுடன் ரஞ்சன் அவனை பார்க்கிறான்.

வந்த பாதையை மறந்தவன்

மனிதனல்ல - போலி

கெளரவம்... ஆபத்தில் உதவாது

பணம் என்பது

மாயை...

போலி கெளரவம்தான்

மனிதனை கேவலமாக்குகிறது.

எஸ். பி. பாலமுருகன்
Previous
Next Post »

More News