‘உண்மையிலேயே நாம் யார் என்று நமக்கு தெரியாததனால்தான் ஒரு மனிதனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்று நமக்குத் தெரிவதில்லை’
பேட்டியாளர்:
உலகெங்கிலும் ஒரு விஷயத்தை காணக்
கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக மேல் நாடுகளில் மீண்டும்
இனவெறி, வெறுப்பு எல்லாம் தலைதூக்கியுள்ளன. இந்த
மாதிரி எதிர்மறையான மற்றும் நச்சுத்தன்மையான விஷயங்கள்
மத்தியில், அமைதி நிலவுவதை எவ்வாறு
ஒருவர் உறுதி செய்யலாம்?
பிரேம்
ராவத்: படகில் ஒரு துவாரம்
இருப்பின், அதனை நீங்கள் அடைக்க
விரும்பினால் அந்த துவாரம் எங்கு
இருக்கின்றது என்று அறிந்து கொள்வது
முக்கியமில்லையா?
பேட்டியாளர்:
நிச்சயமாக.
பிரேம்
ராவத்: அப்படியென்றால் இந்த நச்சுத்தன்மையான விடயங்கள்
எல்லாம் எங்கிருந்து வருகின்றன? இவை வானத்தில் இருந்து
வருகின்றனவா? ஒரு மரத்திலிருந்து வருகிறதா?
ஒரு குறிப்பிட்ட வர்க்கத் தவளையிடமிருந்தோ, நண்டிடமிருந்தோ வருகிறதா? அல்லது மனிதனிடமிருந்து வருகிறதா?
ஏனென்றால், நாங்கள் யார் என்பதை
தவறாக புரிந்து கொண்டுள்ளோம். நாம் அனைவரும் மனிதர்கள்.
நாம் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கின்றோம்.
எனினும் வேடிக்கை எதுவெனில் நான் முக்கியமானவன் என்ற
உணர்வை நான் பெற வேண்டும்
என்பதே. எனக்கு 75 மதிப்பெண்கள் கிடைத்து உங்களை விட ஐந்து
புள்ளிகள் அதிகமாக இருந்தால், அது
எனக்கு நல்ல நல்ல உணர்வைக்
கொடுக்கும்.
உங்களுக்கு
80 மதிப்பெண்கள் கிடைத்தால் அது என்னை விட
5 புள்ளிகள் அதிகம். அது உங்களுக்கு
நல்ல உணர்வைக் கொடுக்கும். என் வகுப்பில் நான்தான்
சிறந்தவன், அதிக புள்ளிகளை எடுத்துள்ளேன்
என்பதை நல்ல உணர்வாக எடுத்துள்ளோம்.
நீங்கள் உங்கள் காரை மற்றைய
கார்களுக்கு முன்னால் போகவும், திரைப்பட டிக்கட் வாங்குவதற்கு வரிசையில்
காத்திருக்கும் பொழுது, திடீரென்று முன்னால்
செல்ல அனுமதிக்கப்படும் போதும் அது உங்களுக்கு
நல்ல உணர்வைத் தரும். தாழ்த்தப்பட்ட உணர்வுடன்
இருக்கும் போது, உயர்ந்தவனாக உணர
விரும்புகிறான் மனிதன். இது இனவெறிக்கு
வேராகிறது. நான் இவர்களை விட
சிறந்தவராக உள்ளேன் என்ற உணர்வை
உணர வேண்டும். 'கொடுமைப்படுத்துதல்' என்பது இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.
பேட்டியாளர்:
ஆமாம்.
பிரேம்
ராவத்: இதனால்தான் குண்டர் கும்பல்கள் உருவாக்கப்படுகின்றன.
ஒரு கும்பலை விட மற்றைய
கும்பல் சிறந்ததாக இருக்க வேண்டும். எல்லா
இடங்களிலும் இதுதான் நடக்கின்றது, இதற்கு
முடிவேயில்லை. இது நாடுகளிலும் கூட
நடக்கிறது. எங்களிடம் உங்களுடையதை விட, பெரிய இராணுவப்
படை இருக்கிறது. எங்களுடைய விமானப்படைதான் பெரியது என்று அதனை
தங்களது அணிவகுப்புகளில் காட்டுவார்கள். மேலும், மேலும் அணிவகுப்பை
சிறப்பாகச் செய்து, தாங்கள் முதல்
இடத்தில் இருக்கின்றோம் என்று சந்தோஷப்படுகிறார்கள். ஏற்கனவே முதலாம்,
மூன்றாம் உலக நாடுகள் என்று
பிரித்து விட்டார்கள். அப்படி அவை அழைக்கப்படுவதில்லை.
ஆனால் மூன்றாம் உலக நாடுகள் என்று
மற்றவை அழைக்கப்படுகின்றன. யார் இந்த பெயரைச்
சூட்டியவர்கள்? மூன்றாம் உலக நாடுகளா? இல்லை,
தன்னை முதலாம் உலக நாடுகள்
என்று கூறிக் கொள்ளாதவைகள்தான், மூன்றாம்
உலக நாடுகள் என்ற பட்டத்தை
சூட்டியவர்கள். பிரச்சினை என்னவென்றால், நாம் எல்லோரும் முதலிடத்தில்
இருந்தும் அதனை அறியாமல் இருக்கின்றோம்.
இதுதான் துக்கம். நம்மிடம் சிறப்பு வாய்ந்த விஷயம்
ஒன்று இருந்தும் அதை புரியாமல் இருக்கின்றோம்.
பேட்டியாளர்:
எவ்வாறு ஒருவர் இந்த ஆற்றலை
பயன்படுத்துவது? ஏனென்றால் உலகம் முழுவதும் இனவெறி,
வன்முறையான நடத்தை போன்ற எதிர்மறையான
விஷயங்களைப் பார்க்கின்றோம். நம்மைச் சுற்றி நிறைய
எதிர்மறையான விஷயங்கள் நடக்கின்றன. ஆனால், சமூக ஆதரவோ
மிகக் குறைவு. இதை நாம்
பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், வேலை இடங்களில் பார்க்கின்றோம்.
உலகம் முழுவதிலும், உங்களின் கருத்தின்படி ஒருவர் தன்னிடம் உள்ள
ஆற்றலை வெளிப்படுத்துவது என்பது எப்படி?
பிரேம்
ராவத்: இது மிகச் சுலபம்,
நாம் பின்நோக்கி வெகு தூரம் சோக்ரடீஸ்
வாழ்ந்த காலத்திற்குச் செல்ல வேண்டும். அவர்
அழகான, எளிமையான, ஆழமான விஷயத்தைக் கூறினார்.
அவன்
அல்ல மனிதன். மனிதன் இருளை
அல்ல ஒளியைத் தன்னுள் சுமந்து
கொண்டு இருக்கின்றான், மனிதன் தன்னுள் ஆனந்தத்தை
சுமந்து கொண்டு இருக்கின்றான், தன்னுள்
தெளிவை சுமந்து கொண்டு இருக்கின்றான்.
சந்தேகத்தை அல்ல. ஆனால் நாம்
யார் என்று நமக்கு புரியாத
போது இதுதான் நடக்கின்றது. ஆபிரிக்காவில்
ஒரு புகைப்படம் எடுப்பவர் ஒரு ஆராய்ச்சி செய்தார்.
அவர் ஒரு பெரிய (துருப்பிடிக்காத
உருக்கு) கண்ணாடியை காட்டில் வைத்தார். ஒரு கொரில்லா தன்னை
அக்கண்ணாடியில் பார்த்து விட்டு தன்னைத்தான் பார்க்கிறது
என்று தெரியாமல் கண்ணாடியில் தெரிவது தனது எதிரி
என நினைத்துக் கொண்டு கோபத்துடன் தனது
நெஞ்சில் அடித்து முகத்தை கொடூரமாக
கண்ணாடிக்கு காட்டுகிறது. இங்கிருந்து ஓடி விடு, இது
என்னுடைய இடம் எனக் கத்துகிறது.
தன்னைத்தான் அதில் பார்க்கிறது என
அதற்கு புரிவதில்லை. சிம்பான்சி குரங்குகளும் அதைத்தான் செய்தன. ஆனால் சிறிது
நேரத்தில் அவை கண்ணாடியில் பார்ப்பது
தன்னைத்தான் என்று புரிந்து கொள்கின்றன.
இதுதான்
விடயம். நீங்கள் யார் என்று
உங்களுக்குத் தெரியாத பொழுது நீங்களே
உங்களது எதிரியாகி விடுகிறீர்கள். அந்த கொரில்லா கண்ணாடியில்
பார்த்த தன் விம்பத்தையே தனக்கு
எதிரியாக்கி விடுகிறது. நாம் நமக்கே எதிரி
ஆகி விடுகிறோம்.
நம்மால்
ஒற்றுமையாக வாழ முடிவதில்லை. மற்றவர்கள்
யார் என்று நமக்கு புரிவதில்லை.
நீங்களும் என்னைப் போன்ற ஒருவர்தான்.
எனக்கு துக்கம் வேதனை தருவது
போல், உங்களுக்கும் துக்கம் வேதனையைத் தருகிறது.
ஆனால் மிக முக்கியமாக உங்களாலும்
ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். என்னாலும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
அந்த
ஆனந்தம் வெளியில் இருந்து வருவதில்லை. அந்த
ஆனந்தம் நம் உள்ளே இருந்துதான்
வருகின்றது. இவை ஆழமான புரிந்துணர்வுகள்.
நாம் மற்றவர்களை நம்பி இருக்க வேண்டியதில்லை.
நாங்கள்
எங்களை நம்பி இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் சோக்ரடீஸ் 'உன்னையே நீ அறிவாய்'
என ஏன் சொன்னார் என்பது
நமக்கு புரியும். நீங்கள்தான் அந்த பொக்கிஷம். நீங்கள்
செல்வம் வேண்டும் என்று விரும்புகிறீர்கள், ஆனால்
உங்கள் செல்வம் ஒரு குகையில்
புதைந்து இருக்கிறதா அல்லது உங்களின் உள்ளே
புதைந்து இருக்கின்றதா?
(தொகுப்பு:
இ.மனோகரன்)
நன்றி - தினகரன்
ConversionConversion EmoticonEmoticon