சமூக வளதள பயனர்களை பதிவுசெய்ய நடடிவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மறுப்பு

 - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மறுப்பு

 

சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான செய்தியொன்று, அதன் முழு அர்த்தத்தையும் தெரிவிக்காத வகையில், சரியான அர்த்தத்தை வழங்காத வகையில் பரவி வருவதாக, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவுசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, குறித்த செய்தி திரிபுபடுத்தி தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் அவ்வாறான ஒன்றை செய்ய விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் தற்போது உலகெங்கிலுமுள்ள நாடுகளினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற வகையில், தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள டிஜிற்றல் தரவுகள் மூலம் நமது உள்நாட்டு வணிகங்கள் குறைத்து மதிப்பிடப்படுதல் மற்றும் அவற்றை தங்களின் கீழ் கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, எனும் செய்தியை தான் அதன் மூலம் தெரிவிக்க முனைந்ததாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் இவ்விடயங்கள், எமது நடுத்தர கைத்தொழில் நிறுவனங்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இது இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களின் கருத்தாகவும் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறான ஆக்கிரமிப்பு முறைகளின் விளைவாக, டிஜிற்றல் தளங்கள் மூலம் பெருமளவு பணம் நாட்டிலிருந்து வெளியே செல்கிறது. எனவே, வெளிநாட்டு டிஜிற்றல் சேவை வழங்குனர்களை பதிவு செய்வது என்பதே, அரசாங்கத்தின் கருத்தாக அமைகின்றதே தவிர, மாறாக சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிற்றல் தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது என்பதல்ல, என்பதை தெரிவிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி - தினகரன்

Previous
Next Post »

More News