உலகில் மிகப்பெரிய மிதக்கும் புத்தகச்சாலை எனக் கூறப்படும் லோகோஸ் ஹோப் என்ற கப்பல் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி வரை காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் புத்தகச்சாலை 09 மாடிகளை கொண்டதுடன் 132 அடி நீளமானது. இதுவரை 164 நாடுகளில் ஆயிரத்து 400 துறைமுகங்களில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளதுடன் இதில் 45 நாடுகளை சேர்ந்த 400 பேர் தொண்டர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
ஜேர்மனியில் பதிவுசெய்யப்பட்டுள்ள தொண்டர் அமைப்பின் கீழ் இந்த கப்பல் செயற்பட்டு வருகிற மேற்படி கப்பலில் 5 ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்றும் உள்ளது.
காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் இந்தக் கப்பலை பார்வையிடச் செல்வோரில் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் 100 ரூபாவைக் கட்டணமாக அறவிடவும் லோகோஸ் ஹோப் கப்பலின் அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கிழமை நாட்களில் காலை 10 முதல் மாலை 4 மணி வரையும், சனிக்கிழமை காலை 10 முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் கப்பலை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவருடத்தை முன்னிட்டு ஜனவரி முதலாம் திகதி மட்டும் கப்பலை பார்வையிட முடியாது என தெரிவிக்கப் பட்டு ள்ளது.
ConversionConversion EmoticonEmoticon