உலகயே உலுக்கிய சுனாமி நினை நாள் 26.12.2013

பி.எம்எம்..காதர்-
'சுனாமி' உள்ளங்களை உலுக்கி உணர்;வுகளை உறங்கச் செய்து உயிர்களைப் பலி கொண்ட நாள் 2004-12-26ம் திகதியாகும்இந்த நாளை யாராலும் மறக்க முடியாது. நம்மை அறியாமலேயே இன்று (2013-12-26) ஒன்பது வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. இந்த சுனாமியில் வீழ்ந்தவர்களும் உண்டு எழுந்து நின்றவர்களும் உண்டு. சுனாமி இழப்பில் இன்று வரை மீளாமல் இருப்பவர்களும் உண்டு. ஜாதி மதம் இனம் என்ற வேற்றுமை இல்லாமல் எல்லோரையும் சுனாமி ஒற்றுமைப்படுத்தியது.
சுனாமி அனர்த்தம் சிலரை வாழ்விழக்கச்; செய்தாலும் சிலரை வாழவைத்தும்

இருக்கின்றது. சிலர் சுனாமியைச் சொல்லிச் சொல்லி இன்று வரை கையேந்தி வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள் சிலர் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து எங்களாலும் வாழ முடியும் என்பதை நிரூபித்தும் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள் என்பதை கடந்த ஒன்பது ஆண்டுகள் நமக்குப்புரிய வைத்திருக்கின்றது.

சுனாமி அனர்த்தத்தில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட கரையோரப்

பிரதேசத்தில்; மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் கல்முனையாகும் இங்கு பெரும் தொகையான முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் உயர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதே போன்று கோடிக் கணக்கான சொத்துக்களும் பொருட்களும் உயிரினங்களும் அழிந்தன,

கணவனை இழந்த மனைவி மனைவியை இழந்த கணவன் பிள்ளைகளை

இழந்த பெற்றோர் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் சகோதரனை இழந்த சகோதரி சகோதரியை இழந்த சகோதரன் என பலதரப்பட்ட உறவுகளால் பின்னிப் பிணைந்த உடன் பிறப்புக்கள் மற்றும் நட்புடன் கூடிய சொந்த பந்தங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தமை பலரின் வாழ்வில் மறக்க முடியாத தடயங்களாய் இன்றும் இதயச் சுமையாகிப் போய்விட்டது.

இயற்கையாய் மரணிப்பதற்கும் அனர்த்தம். விபத்து, காணாமல் போகுதல் கொலை போன்றவற்றால் மரணிப்பதற்கும்  இடையில் வித்தியாசமான மனோநிலை உருவாகும். சிலர் தைரியமான மன நிலையல் இழப்புக்களை ஏற்றுக் கொள்வார்கள் சிலர் மன வேதனையுடன் மன நோயாளிகளாக மாறி அந்த நிலையிலேயே மரணித்தும் பொய்விடுகின்றார்கள. இது சுனாமியின் கண்டறியப்பட்ட உண்மையாகும்.


இந்த நிலையில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் பலர் கல்வி கற்க வசதி இல்லாத நிலையிலும் அவர்களை ஒழுங்காகப் பராமரிக்க ஆள் இல்லாத நிலையிலும்  கல்வியைத் தொடர முடியாமல் இடைநடவே விட்டு  விட்டு திசை மாறிச்செல்கின்ற நிலைக்குள்ளாகி இருக்கின்றனர். பல சிறுவர்கள் வீட்டு வேலை மற்றும் கடைகளிலும் தொழில் புரிவதையும்  அவதானிக்க முடிகின்றது. இன்னும் சிலர் சமூகச்சீர் கேடுகளுக்குள்சிக்கி போதைவஸ்துப்பாவனைக்கு  அடிமையாகி தங்களை அழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.






மறுபக்கத்தில் சுனாமியில் கணவனை இழந்த சில விதவைகள் தங்கள் குடும்ப வாழ்வை முன்னெடுக்க முடியாமல் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா.; விதவை வாழ்வு என்பது முள்ளில் நடப்பதைப் போன்ற தாகும் இந்த நிலையில் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் உணவு மற்றும் உடை ஏனைய செலவுகள் போன்றவை பாரிய சுமையாகவே அமைந்த விடுகின்றன இவ்வாறான சுமைகளுடன் எத்தனையோ விதவைகள் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.


இவ்வாறான சூழ்நிலையில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் இன்னும் வீடுகளை கட்டிக்கொடுக்காத நிலையும் கட்டிய வீடுகளைக் கொடுக்காத நிலையும் கானப்படுகின்றது. பல குடும்பங்கள் இன்றுவரை கொட்டில் களிலும், குடிசைகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள.; இதன் காரணமாக வயது வந்த பல பெண்பிள்ளைகள் திருமணவாழ்வில் இணைய முடியாமல் முதிர் கன்னிகளாக வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.


சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியில் அம்பாறை நுரைச்சோலை எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள 500 வீட்டுத்திட்டமானது சமூக விரோத செயற்பாடுகளின்  உறைவிடமாகவும்  பற்றைக் காடுகளாகவும் காட்சியளிக்கின்றன. இதற்கு காரணம் சுனாமியால் பாதிக்கப்படாத சிங்கள மக்களுக்கும் அதில் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என அரசியல் வாதிகள் முரண்டு பிடிப்பதே ஆகும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென அவர்களின் கலை, கலாசார அடையாளங்களை பிரதிபடுத்தக்கூடியவாறு இவ்வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கபபடாத சமூகம்; உரிமை கோருவது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும். தற்போது இவ்வீட்டுத்திட்ட விவகாரம் நீதி மன்ற விடயத்தில் இருப்பதனால் அதற்கான தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை;.

 இதனால் உறவுகளை, வீடுகளை இழந்த மக்கள் அகதிகளாகவே உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர். பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் காலம் தாழ்த்தாது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். சில அரசியல் வாதிகள் இதனை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தி ஏழைகளின் வயிற்றெரிச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
இதே போன்று கல்முனை தமிழ் பிரதேசங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென  அரச சார்பற்ற நிறுவனங்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டுத் திட்ங்களும் அரையும் குறையுமாகவே காணப்படுகின்றன. இதில் பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் மேட்டுவட்டை வீட்டுத்திட்டம் இன்றும் வசதிகள் அற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. இங்கும் சில வீடுகள் முழுமை பெறாத நிலையில் உள்ளன.
2004 டிசம்பர் 26 இற்கு முன்னர் தனித்தனி வீடு , வாசல்களில் சுதந்திரமாய் வாழ்ந்த இப்பகுதி மக்கள் இன்று தொடர் மாடி வீட்டுத் திட்டங்களில் சொல்லொண்னா துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் கல்முனை பெரியநீலாவணை பகுதிகளிலுள்ள  குறித்த தொடர் மாடிகளில் நீர், மின்சாரம் சுகாதாரம் மற்றும் கலைகலாசார ரீதியிலான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக இவர்கள் மிகுந்த மன உளச்சலுக்கு மத்தியிலே காலத்தை கடத்தி வருகின்றனர்.


மேலும் மருதமுனை மேட்டுவட்டைப் பிரதேசத்தில் பல வீடுகள் இன்னும் வழங்கப்படாமல் மாவட்டச் செயலாளரினால் இன்று வரை  இழுத்தடிக்கப்பட்ட வருகின்றது. மேலும் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிலும் பல குடும்பங்களுக்கு பூரணமாக இன்னும் வீடகள் வழங்கப்படவில்லை இதனால் பல குடும்பங்கள் நிர்க்கெதியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.



ஓவ்வொர வருடமும் சுனாமி நினைவுநாளில் இழந்த உறவுகளை நினைத்து அழுது புலம்பி ஆர்ப்பரித்து தங்கள் மனச்சுமைகளை குறைத்துக் கொள்வதைத்;தவிர வேறு வழியில்லை எனபதே யதார்த்தமாகும். சுனாமி நமக்குக் கற்றுத் தந்த பாடங்களை அடிப்படையாக வைத்து எம்மைப் படைத்த இறைவனை முன்னிறுத்தி வாழ்வதே மறுமை வாழ்வுக்கு வழிகோலும்
Previous
Next Post »

More News