ஒவ்வொரு சமயங்களில் காணப்படும் ஒரு பொதுவான கடமையாக இது காணப்படுகின்றது. எனவே, தான இஸ்லாம்
என்பது ஒரு சாந்தியான சத்திய
மார்க்க மாகும். அதில் ஒருவன்
அதனை பின்பற்றும் முஸ்லிமாக இருந்தால் பின்வரும் ஐந்து கடமைகளை செய்வதற்கு
வேண்டப்படுகின்றான். அவ்வாறே கலீமா, தொழுகை,
நோன்பு, ஷகாத், ஹஜ் அமைந்து
காணப்படுகின்றன.இந்த இடத்தில் அக்கடமைகளில்
ஒன்றான நோன்பை பற்றி சற்று
நோக்கினால் மிகவும் சிறப்பாக அமையும்.
அந்தவகையில்
கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள்
சமூகத்திற்கு கடமையாக்கப்பட்ட எதற்காக உலக முஸ்லிம்களுக்கு
அல்லது உலக மக்களுக்கு கடைமையாக்கப்பட்டது
என்பதை நோக்கினால் முழு உலகுக்கும் இறக்கியருளப்பட்ட
அல்குர்ஆனை பெற்றதற்காகவே அன்றி வேறில்லை. அது
நாம் செய்கின்ற கிரியை மட்டுமல்ல அதனால்
மனித சமூகத்திற்கு பல நன்மைபயக்க வல்ல
அற்புதங்களையும் கொண்டுகாணப்படுகின்றது.
அவ்வாறே
இது ஒரு விஞ்ஞானம் என்பதை
நோக்கினால், தற்கால மருத்துவவிஞ்ஞானம் ஒரு
மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு
சற்று நேரம் உணவு உட்கொள்ளாது
இருத்தல் “(Fast)” என்பது சிறந்த நோய்
நிவாரணி என அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையே இன்று
நோன்பு செய்யும் வேலையுமாகும் உடலினுள் அதிக உணவுகள் காணப்படுகின்றபோது.
உடலின்
உட் தொழிற்பாட்டு இயக்க அங்கங்கள் களைப்படைகின்றன.
ஆனால் நோன்பின் போது இரைப்பை வெறுமையடைகிறது.
இதனால் தொழிற்பாட்டு அங்கங்கள் ஓய்வடைந்து மீண்டும் உணவை உட்கொள்ளும் போது
புத்துயிர்ப்புடன் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன.
அது மட்டுமின்றி உடலில் காணப்படும் குளுக்கோசின்
அளவை சமப்படுத்துவதோடு உடலில் காணப்படும் எண்ணெய்
படிமம் உருகுவதற்கும் வழி கோலுகின்றது. இதனால்
உடலில் கொலஸ்திரோல் குறைவடைய அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல்
உடல் சக்தியை அதிகரிக்கத் தேவையான
குளுக்கோஸ் தொழிற்பட ஆரம்பிப்பதால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
நச்சுப்பதார்த்தங்கள் கரைய ஆரம்பிக்கின்றன.
உடலினுள்
உணவை உட்கொள்ளாது விடத்து குடற்புண்கள் ஏற்பட
வாய்ப்புண்டு என்று கூறினாலும் அதிக
உணவை உட் கொள்கின்ற போதான
நிலைமைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காரம் போன்று
பதார்த்தங்களின் மூலமாகவே இப்புண்கள் அதிகம் ஏற்படுகின்றன.
நோன்பின்
மூலம் குடலில் ஈரப்பதன் குறைவடைகிறது.
இதனால் குடற்புண் எளிதில் சுகமாகும் வாய்ப்புகள்
அதிகம் காணப்படுகின்றன. இதனால் பிரபல வைத்தியரான
‘ஷெல்டன்’ என்பவர் ‘நோன்பின் மூலம் பரிகாரம்’ எனும்
நூலை எழுதினார்.
இருதய துடிப்பு அளவை அளவீடு செய்து
பரிசோதிக்கும் போது (E.C.G) சற்று நேரம் உண்ணாமல்
இருக்க வேண்டும். எனும் வைத்திய ஆலோசனைகள்
பணிப்பது உட்கொள்ளும் உணவின் தரத்திற்கேற்ப இருதய
துடிப்பு மாறுபட்டுக் கொண்டிருக்கிறது. என்பதால் அவ்வாறே நோன்பின் போது
இருதய துடிப்பு சீராக காணப்படுகிறது.
இந்த வகையில் தான் நோன்பு
திறக்கின்ற போது இருதய துடிப்பு
ஆரோக்கியமான முறையில் தொழிற்படுகின்றன. நாங்கள் நோன்பு திறக்கின்ற
வேளையில் அதிகமாக பாவிக்கும் உணவாக
பேரித்தம்பழத்தை சற்றே ஆய்வுக்குட்படுத்தும் போது, அதில்
குளுக்கோசினும் அதிக உயிர்ச்சத்துக்களையும் கொண்டிருப்பதை காணலாம்.
நோன்பு
துறக்கும் போது இதனை உட்
கொண்டால், குளுக்கோசினின் அளவு சீராக்குவதுடன் இருதயத்துடிப்பின்
ஊடாக இரத்தத்தையும் தூய்மையாக்கிறது. அத்தோடு இரத்த ஓட்டம்
சீராக முழு உடலுக்கும் செல்ல
வழிவகுக்குகிறது.
இந்நோன்பு
வெறுமனே உடலியல் மருத்துவம் மாத்திரமின்றி
உள்ளம், ஆன்மா, என்பவற்றை சீராக்கும்
ஓர் உன்னத அற்புதத்தையும் விஞ்ஞானரீதியில்
செய்து கொண்டிருக்கிறது.
உளவியல்
வைத்திய நிபுணரான “டாக்டர் ஹஷ்ணு” என்பவர்
கூறுகிறார் “நோன்பின் போது உடலில் என்றோபீன்
(Endrobeen) எனும் பதார்த்தம் சுரக்கிறது. இது மனிதனின் சிந்தனையை
தூய்மையாக்குவதோடு, நேரிய சிந்தனை (Positve thinking) யையும் ஏற்படுத்துகிறது”
என்று நோன்பின் முக்கியத்துவத்தை அவர் விஞ்ஞான ரீதியில்
விளக்குகிறார்.
உளவியல்
நிபுணர்கள் கூறுகிறார்கள் “தீய ஒருமனிதனின், கெட்ட
குணங்கள், தீய செயல்கள் என்பன
அவனை விட்டும் தூரமாக விலக 8-21 நாட்கள்
தேவை” என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்
அதே போலதான் நோன்பு 30 நாட்களை
கொண்டு காணப்படுகின்றனது.
இதனால்
ஒருமனிதன் உள்ளத்தால் திருந்துவதற்கு அதிகநாட்களை நோன்பு கொண்டுள்ளது. இன்று
“புனர்வாழ்வு” எனும் முறையில் கூட
இதை ஒன்றாக கையாளுகிறார்கள். அதுமட்டுமின்றி
நோன்பு நோற்ற மனிதன் தன்னை
கட்டுப்படுத்துவதன் மூலமாக தன்னம்பிக்கையை (Self confident) வளர்த்துக் கொள்கின்றான்.
அவனது ஆன்மீக பலம் அதிகரிக்கிறது.
எந்தப்பணக்காரனாக இருந்தாலும் ஒரு ஏழையின் உணர்வை
பசியின் மூலம் உணரவைத்து அவனுக்கு
பணிவை கற்றுக் கொடுக்கிறது. அவனிடம்
பெருமை என்பது இருக்கக் கூடாது
என்பதை கற்றுக் கொடுக்கிறது. இவ்வாறு
விஞ்ஞானம் கூறும் உளவியலை இன்று
நோன்பு செவ்வனே செய்துவருகிறது. இவ்வாறு
எத்தனையோ பல விஞ்ஞான உண்மைகளை
கொண்டு காணப்படும்.
இந்நோன்பை
பற்றி அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டது. நபி
(ஸல்) அவர்களது வாழ்வில் இவ்விஞ்ஞான உண்மைகளை செயற்படுத்திக் காட்டினார்கள். அதனால்தான் நோன்பு நோற்றுக் கொண்டு
எத்தனையோ யுத்தங்களை மேற்கொண்டு வெற்றியடைந்தவர்கள் நாங்கள் நோன்பினூடாக சக்தியை
பெறமுடியும் என்பதை இந்த வரலாறு
எமக்கு காட்டுகிறது.
எனவே, பல விஞ்ஞான உண்மைகள்
மற்றும் மருத்துவ உண்மைகளையும் கொண்டமைந்த இந்நோன்பு வெறுமனே சாதாரண ஒன்று
அல்ல இதில் முழுக்க மனித
நலன்களே பொதிந்து காணப்படுகின்றது. ஆகவே இந்நோன்பு முஸ்லிம்களுக்கு
மாத்திரமல்ல, முழுமனித சமூகத்திற்குமே என்பதை விளங்கி செயற்படுவோமாக.
ConversionConversion EmoticonEmoticon